Stress Relief Tips: உங்களை எப்போதும் மன அழுத்தம் இல்லாமல், மகிழ்ச்சியான வைத்துக் கொள்ள தேவையான உதவி குறிப்புகள்.
மன அழுத்தம்:
மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை நம்மில் பலரும் எதிர்கொண்டு வருகிறோம். மன அழுத்தம் ஒருவருக்கு உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு சின்ன சின்ன விஷயத்திற்கு கூட பதற்றமாகி மன அழுத்தம் ஏற்படும். சிலர் தங்கள் எதிர்காலம், கடன் சுமை, வேலை, EMI கட்டுவது மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை அதிகமாக சிந்தித்து, மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது சற்று கடினம் என்றாலும் கூட, நம்மால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் சுற்றுப்புறத்தை, அமைதியாகவும், மன மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இதுவே உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் முதல் படியாகும்.
மேலும் படிக்க…Garlic Milk Benefits: தினமும் 1 டம்ளர் பூண்டுப் பால் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?
தியானம்:
மன அழுத்தம் குறைய சந்திர பிராணாயாமம், சீத்காரி, சீத்தாலி மற்றும் பஸ்திரிக்கா போன்ற ஆழமான சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அவ்வப்போது தியானம் செய்வது, மனதிற்கு பிடித்த இசையில் தங்களை ஈடுபடுத்தி கொள்வது போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும்.
செல்போன் பயன்பாடு:
மன அழுத்தத்தை குறைக்க எப்போதும் வாழ்க்கையில் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், எப்போதும் புதிய விஷயங்கள் கற்றுக் கொள்வது, மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். மன அழுத்தம் தரும் விஷயங்கள் இல்லாமல் இருக்கும். செல்போன்களை எப்போதும் படுக்கை அறைக்கு செல்லும் போது எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது.
தூக்கம் அவசியம்:
மனிதருக்கு போதுமான அளவு தூக்கம் அவசியமான ஒன்றாகும். சரியான தூக்கம் ஒருவருக்கு இல்லாவிட்டால் சோர்வு, மந்தத்தன்மை போன்றவை ஏற்படும்.
ஆரோக்கியமான உணவுகள் அவசியம்:
மன அழுத்தத்தை குறைப்பதற்கு உணவு விஷயத்திலும், ஒருவர் அதிக கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் உடலை நீரோட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய இசையை கேட்கும் போதும், உடற்பயிற்சியில் ஈடுபடும் போதும் மன அழுத்தம் குறையும்.
விளையாட்டில் ஆர்வம் செலுத்துங்கள்:
செஸ் விளையாட்டு, புத்தகங்கள் படிப்பது போன்ற செயல்களில் நம்மை ஈடுபடுத்தி கொள்வது, நம்மை மன அழுத்தம் இல்லாமல் பாதுகாக்கும்.
ஸ்ட்ரெஸ் பால் (stress ball) வைத்துக் கொள்ளுங்கள்:
இன்னும் சிலர் மன அழுத்தம் காரணமாக நகம் கடித்து வைப்பார்கள். இந்த பழக்கம் நாளடைவில் செரிமான நோய் தொற்று, போன்ற உடல் நலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, மன அழுத்தம் ஒருவரின் தன்னம்பிக்கை குறைந்து போகும். எனவே, நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட கையில் எப்போதும் கைகளில் ”ஸ்ட்ரெஸ் பால்” (stress ball) வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க…Garlic Milk Benefits: தினமும் 1 டம்ளர் பூண்டுப் பால் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..?