லியோ படத்தில், த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இல்லை என மன்சூர் அலிகான் சில மாதங்களுக்கு முன்பு பேசி இருந்தது சர்ச்சையை கிளப்பியது. அதற்கு, நடிகை திரிஷா கடும் கோபமாக பதிலடி கொடுத்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்டார். தற்போது, மீண்டும் த்ரிஷா ஒரு சர்ச்சை விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா:
சமீபத்தில், அதிமுக கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டியில், கடந்த 2017 ஆம் ஆண்டு 100 அதிமுக நிர்வாகிகள் தங்கியிருந்த கூவத்தூர் எஸ்டேட்டிற்கு நடிகைகள் த்ரிஷா உள்ளிட்டோர் பலர் பிரபல நடிகர் ஒருவர் மூலம் அழைத்துவரப்பட்டதாகவும், அதில் ஒரு எம்எல்ஏ த்ரிஷா தான் வேண்டும் என அடம்பிடித்ததாகவும், அதற்காக 25 லட்சம் தரப்பட்டதாகவும் பேசியிருந்தார்.
இவரின் இந்த பேச்சு தமிழகமெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் இந்த பேச்சுக்கு பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன், இயக்குனர் திரு, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் கண்டன குரல்களை எழுப்பி வந்தனர். அதுமட்டுமின்றி, இவர் மீது உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், நடிகை திரிஷாவும் இந்த விஷயம் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
நடிகை திரிஷா தனது X பக்கத்தில்:
இது குறித்து நடிகை திரிஷா தனது X பக்கத்தில், சுய விளம்பரத்திற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும், கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்ப திரும்ப பார்ப்பது அவருவறுப்பாக உள்ளது. இதுபோன்ற மனிதர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும், கீழே இறங்கி செல்கின்றனர் . இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் எனது சட்ட ஆலோசகர் செய்வார் என கோபமாக தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி ஆவேசம்:
இது குறித்து நடிகை கஸ்தூரி, இப்போது தான் மன்சூர் அலிகான் பிரச்சனை ஓய்ந்தது. பார்க்காத விஷயத்தை பற்றி எப்படி இப்படி பேச முடியும்? சினிமா துறையில் இருப்பவர்களை பற்றி இப்படி ஆபாசமாக பேசுவது கண்டிக்கத்தக்கது, என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
பகிரங்க மன்னிப்பு கேட்ட ஏ.வி.ராஜு:
இந்த நிலையில், தற்போது தான் திரைத்துறையினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக ஏ.வி.ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தான் ”திருஷாவை போல இளம் நடிகைகளை தான் அவர் கேட்டார்” என்று கூறியதாகவும், எந்த நடிகைகையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார். இவரின் இந்த பதில் அந்தர் பல்டி அடிப்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.