ஹாட்ரிக் வெற்றி:
நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரியில் துணிவு படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என இந்தக் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது.
மேலும் படிக்க….சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா! கொழுந்துவிட்டு எரியும் கூவத்தூர் சம்பவம்!
அஜித் ஜோடியாக திரிஷா:
இதையடுத்து, இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
இந்த படம் தொடர்பான ஆக்ஷன் காட்சியின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் சம்பளம்:
இந்த விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித்திற்கு ரூ. 105 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார்.
இவர் இயக்குனர் மட்டுமின்றி, அஜித்தின் தீவிர ரசிகரும் ஆவார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் படப்பிப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க….சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா! கொழுந்துவிட்டு எரியும் கூவத்தூர் சம்பவம்!
விடாமுயற்சி படத்தை காட்டிலும், குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக 58 கோடி அதிகமாக அதாவது ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது சம்பளத்தை ரூ. 200 கோடியாக உயர்த்திய அஜித்:
இதையடுத்து, தொடர்ந்து சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய அஜித், குட் பேட் அக்லி படத்திற்கு பின் தனது சம்பளத்தை ரூ. 200 கோடியாக உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, விஜய் Goat படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கியுள்ள நிலையில், அஜித்தும் தனது சம்பளத்தை ரூ. 200 கோடியாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க….சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா! கொழுந்துவிட்டு எரியும் கூவத்தூர் சம்பவம்!