Garlic Milk Benefits: இன்றைய நவீன காலகட்டத்தில் மக்கள் பலரும் உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால், இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், உணவு விஷயத்திலும் ஒருவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எத்தனையோ உணவுகளை நாம் விரும்பி சாப்பிட்டாலும் பாலில் அனைத்தையும் விட அதிகமான நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த வரிசையில், ஆரோக்கியமான டயட் பட்டியலில் பூண்டு பால் இணைந்துள்ளது.
குறிப்பாக, பாலில் இருக்கும் வைட்டமின் டி, கால்சியம், போன்றவை பற்களுக்கு வலிமை தருகிறது. பாலில் குறிப்பிட்ட அளவு ரெட்டினேல் இருப்பதால் வயதான தோற்றத்தை தள்ளிப்போடுகிறது. சோம்பலாக இருக்கும் போது ஒரு கப் பால் எடுத்தால் புதிய புத்துணர்ச்சி கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பூண்டுடன் சேர்த்து பால் எடுத்துக் கொள்வது, உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பூண்டுப் பால் முகப்பரு பிரச்சனையை சரிசெய்யும். இதய அடைப்புகளை நீக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மலேரியா, காசநோய்களை தடுக்கும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். செரிமான சக்தியை அதிகரிக்கும். மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும். நுரையீரல் அழற்சியை குணப்படுத்தும்.
இருப்பினும் பூண்டு மற்றும் பால் ஆகிய இரண்டையும் கலந்து குடிப்பது சில நேரங்களில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பூண்டுடன் பால் கலந்து குடிப்பதால், தோலில் அலர்ஜி ஏற்படக் கூடும். பூண்டில் இருக்கும் சத்துக்கள் வெடிப்புகளை உண்டாக்கும் என்பதால், தோல் எரிச்சல், தோல் அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
பூண்டு பால் தயாரிப்பு முறை:
ஒரு பாத்திரத்தில் பால் 1 டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பூண்டு பற்களை சேர்த்து சுண்ட காய்ச்சி கொதிக்க வையுங்கள். இப்போது, காலை, மாலை ஆகிய இரண்டு வேளை பூண்டு பால் குடிக்கலாம்.