தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
வேர்க்கடலையில் இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை தினமும் உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தினசரி உணவில் வேர்க்கடலை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
வேர்க்கடலையில் நிறைந்துள்ள வைட்டமின் பி3, வைட்டமின் பி9 அல்லது ஃபோலிக் அமிலம் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முக்கியமானது. மேலும், இதயம் ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.
வேர்க்கடலையில் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி1 மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இது, மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு, எரிச்சலையும் போக்கும்.
மேலும், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முதுமையை தள்ளிப்போடலாம். தேவையற்ற கொழுப்புகள் சேராமல் பாதுகாக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்:
வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
எடை இழப்பு:
தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வேர்க்கடலையில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.
இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவும்:
வேர்க்கடலையில் இதயத்திற்கு ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் நிறைந்துள்ள மெக்னீசியம், நியாசின், தாமிரம் உள்ளிட்டவை இதயம் ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
வேர்க்கடலை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது:
வேர்க்கடலையில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எலும்புகளை வலுவாக்கும்:
வேர்க்கடலை மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற தாதுக்களின் நல்ல மூலமாகும். அவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.