இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 47 வயதே ஆகும் பவதாரிணியின் இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைத்துறையினர் அஞ்சலி:
இலங்கையில் உயிரிழந்த பவதாரிணியின் உடலை சென்னை கொண்டு வர, அவரது சகோதரர் யுவன் இலங்கை சென்றுள்ளார். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மகளின் உடலை பார்த்து இசைஞானி இளையராஜா கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. இன்று அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு, இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள், உறவினர்கள், திரைத்துறையினர் அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து இன்று இரவு இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை காலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
என் அன்பு மகளே’ இளையராஜா உருக்கம்:
இந்நிலையில், இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில், பவதாரிணி குழந்தை பருவத்தில் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ”என் அன்பு மகளே” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இன்று இரவு இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை காலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பின்னணிப் பாடகியான பவதாரிணி பாடிய காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்ற, என்னை தாலாட்ட வருவளா? தாமிரபரணி படத்தில் இருந்து தாலியே தேவையில்லை, அழகி படத்தில் இடம்பெற்ற ஒளியிலே தெரிவது தேவதையா? உள்ளிட்ட பாடல்களை இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கமல், விஷால், சிம்பு, வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இவர்களது குடும்பத்திற்கு தங்கள் ஆறுதல்களை தனது x தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மாநாடு படத்தில் வரும் ‘மாஷா அல்லா’ பாடல்:
மாநாடு படத்தில் வரும் ‘மாஷா அல்லா’ பாடலை பவதாரிணி பாடி இருந்தார். அவரது அன்பான, குழந்தைத்தனமான குரல் மக்கள் இதயங்களில் இருந்து எப்போதும் மறையாது.
சிம்பு உருக்கமான பதிவு;
உங்கள் குடும்பத்திற்கு வலிமை அளிக்க இறைவனை பிராத்திக்கிறேன் என சிம்பு பதிவிட்டுள்ளார். இது குறித்து விஷால், அன்புள்ள பவதாரிணி இதை என்னால் ஜீரணிக்க முடியாமல் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். ஒரு நல்ல உள்ளம் எங்களை விட்டு பிரிந்ததை நினைத்து வருந்துகிறேன்.
கமல் உருக்கமான பதிவு;
கடந்த சில நாட்களாகவே நான் விரும்பும் நபர்களை இழந்து வருகிறேன். I miss you, உங்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல், மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை.
அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.