Thaipusam 2024: தைப்பூசத்தன்று முருகன் அசுரர்களை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான். தமிழ் கடவுளான முருகன் அசுரர்களை அழிக்க பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து உருவாக்கிய வீரவேலை வாங்கி, முருகன் தன் கையில் ஏந்திய நாளே தைப்பூசமாகக் கொண்டப்படுகிறது.
முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமான நாள் தைப்பூசம் 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம், தை மாதத்தில் பூச நட்சித்திரத்தில் வரும் புண்ணிய நாள் தைப்பூசமாக கொண்டப்படுகிறது. மேலும், தைப்பூசம் வரும் தினம் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
நினைத்தது நடக்கும் தைப்பூசம் திருநாள்:
தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நமக்கு எல்லா வளமும், நலமும் உண்டாகும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் உங்கள் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், இந்த நாளில் செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பழனிக்கும் தைப்பூசத்திற்கும் உள்ள தொடர்பு
பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், கைலாச நாதருடன் தனிக் கோவில் இருக்கிறது. இந்த இரண்டு சன்னதிக்கு நடுவில் முருகன் சன்னதி அமைத்துள்ளது. கோவிலின் பிரதான அம்மனும், சிவனும் இருந்தாலும் பிரதான வாசல் மற்றும் கொடிமரம் ஆகியன முருகன் சன்னதிக்கு எதிரில் அமைத்துள்ளது. தைபூச திருவிழாவுக்கான கொடி முருகன் சன்னதிக்கு கொடி மரத்தில் ஏற்றப்படுகிறது. இதனால், தைப்பூச விழாவும் முருகனுக்கான விழாவானது குறிப்பிடத்தக்கது.
பழனியில் தைப்பூசம் திருவிழா கோலாகலம்:
பழனியில் தைப்பூசம் திருவிழா என்பதால், கூட்டம் கூட்டமாக மக்கள் வழிபட்டனர். பழனி மலை அடிவாரத்தில், பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, என பல்வேறு காவடிகளை சுமந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.