Sharing is caring!

இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகண நிகழ்வு (ஏப்ரல் 8) நடைபெற உள்ளது. இந்த கிரகணம் சுமார் 4 மணி 39 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9:12 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2:22 வரை நீடிக்கும்.

சூரிய கிரகணம் எப்போது தெரியும்?

மேலும் படிக்க…Solar Eclipse 2024: முழு சூரிய கிரகண நிகழ்வு: கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

பொதுவான சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் பார்வையில், இரண்டுமே அசுபமாக பார்க்கப்படுகிறது. இந்த முழு சூரிய கிரகண நிகழ்வின் போது நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும். இந்த நேரத்தில் நிலவு சூரியனை மறைத்து வைரம் போல் ஜொலிக்கும். இந்த அற்புத நிகழ்வு அட்லாண்டிக், அமெரிக்கா, வட அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடாவின் சில பகுதிகளில் தெரியும்.

எந்த ராசிகளின் வாழ்கை தலைகீழாக மாறும்:

ஆனால், இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் அல்லது ஆசியாவில் பார்க்க முடியாது. இந்த சூரிய கிரகணம் மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. இது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் தருகிறது. அப்படி யாருக்கு என்ன பலன் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க…Solar Eclipse 2024: முழு சூரிய கிரகண நிகழ்வு: கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

இதன் தாக்கம் அனைத்து ராசியினர் மீதும் இருக்கும். குறிப்பாக, ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசியினர் இந்த கிரகணத்தை தொடர்ந்து மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். சுகாதார ரீதியான தொல்லைகள் இவர்கள் அனுபவிக்க நேரிடும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் சாதகமான பலனைத் தராது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் உங்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். இந்த நேரத்தில் உங்களின் வேலை பளு அதிகரிக்கும். பயணத்தில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.

துலாம்:

இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை தராது. அதிகப்படியான மன அழுத்தம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு இருக்கும். திருமண காரியம் தடைபடும். வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் நஷ்டம் வரலாம். அதிக பண தேவை இருக்கலாம். தேவையற்ற மன அழுத்தம் வரலாம்.

மகரம்:

இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் மகரம் ராசியினருக்குப் சாதகமாக இருக்காது. நிதி சிக்கல் ஏற்படலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபடும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் ஒருமுறைக்கு, பலமுறை ஆலோசனை பண்ணி எடுப்பது அவசியம்.

மேலும் படிக்க…Solar Eclipse 2024: முழு சூரிய கிரகண நிகழ்வு: கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

(Visited 13 times, 1 visits today)

Sharing is caring!