18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ்:
கடந்த அக்டோபர் 2-ம் தேதி பிரம்மாண்டமான முறையில், 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் பைனல் நாளை நடைபெறவுள்ளது. இதில் யார் டைட்டில் ஜெயிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணி என ஐந்து போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
2வது இடத்தை கோட்டைவிட்ட மாயா:
பிக்பாஸ் தொடரின் கடைசி எபிசோட் நாளை ஒளிபரப்பாக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். அவருக்கு 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். இந்த நிலையில், கடைசி நேரத்தில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், அதிரடியான மாற்றம் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
டைட்டிலை தட்டித் தூக்கிய நபர்:
கடந்த சில வாரங்களாகவே அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிடைத்த உறுதியான தகவலின் படி தற்போது பிக் பாஸ் 7 டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மாயா, அர்ச்சனா இடையே கடுமையான போட்டி நிலவி வந்தாலும், கடைசியாக அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளதாக தெரிகிறது. நாளைய எபிசோட்டில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
2 வது இடத்தில் நடன கலைஞர் மணி:
அவரை தொடர்ந்து 2 வது இடத்தில் நடன கலைஞர் மணி தேர்வாகி உள்ளார். அதே நேரத்தில் வலுவான போட்டியாளராக திகழ்ந்து வந்த மாயா மூன்றாவது இடம் பிடித்துள்ளார். அதுபோல விஷ்ணு மற்றும் தினேஷ் இருவரும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்மூலம், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டி என்ட்ரி மூலம் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.