சூரியனும், சந்திரனும் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் ஒரே நேர்கோட்டில் இணையும் நாளை நாம் அமாவாசை என்கின்றோம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் என்றாலும், இந்த தை மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் தை அமாவாசை (இன்று) பிப்ரவரி 09ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களிடம் ஆசி வாங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
ஜோதிடத்தின் படி, இந்த நாளில் குபேரனின் அருள் பெற்றோர் வாழ்கை முழுக்க பணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள். அதிலும், இந்த நேரத்தில் சில ராசிகளின் மீது குபேரன் எப்போதும் தனது கனிவான பார்வையை செலுத்துகிறார். அதாவது,சிம்மம், மிதுனம், கடகம், விருச்சகம், தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசியினர் பணம் பற்றாக்குறையை எப்போதுமே உணர மாட்டார்கள் என்கிறது ஜோதிடம். இவர்களோடு சுக்கிரன், வியாழன், இணைந்தால், காட்டில் பணமழைதான்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் தொட்டதெல்லாம் துலங்கும். இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவார்கள். உங்களுக்கு இந்த நாளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் செல்வம் பெருகும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் கிட்டும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். உங்கள் கணவரின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசியினர் அனைத்து கஷ்டங்களில் இருந்து வெளியே வருவீர். உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் பெருகும். இவற்றால் அனுகூலமான பலன்களும் கிடைக்கும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியினர் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் பல சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் வருமானம் கூடும். உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இரட்டிப்பு பலன் உண்டாகும்.
மீனம்:
மீன ராசியினருக்கு தொட்டது துலங்கும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்ப வாழ்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அனுகூலமான பலன்களை அனுபவிக்கலாம்.