Sharing is caring!

பிக்பாஸ் சீசன் 7 துவங்கி இன்று மூன்றாவது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த மற்ற 6 சீசனை போல் இல்லாமல், இந்த சீசன் சற்று மாறுபட்ட விதத்தில், துவங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் இரண்டு வீடு, இரண்டு குரல் என பிக்பாஸ் வீடு களைகட்டியது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில், வாக்குவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பிக்பாஸ் டீம் இறங்கியுள்ளது. முதலில் துவங்கிய கேப்டன்சி டாஸ்க் முதல் தற்போது நடந்து முடிந்த ”நோ யுவர் ஹவுஸ்மெட்ஸ்” டாஸ்க் வரை ஏகப்பட்ட சண்டைகள், சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய நாள் விசித்ரா, விஜய் வர்மா ஆகிய இருவருடனும் பிரதீப் ஆண்டனிக்கு வாக்குவாதம் வெடித்தது.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: ஐயையோ..ஐஷு இல்லை அனன்யா..! பேர மாத்தி நாமினேட் செய்து..சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் விசித்ரா!

பிக்பாஸ் வீட்டில் இருந்து சுமல்பாஸ் வீட்டிற்கு கேப்டனை குறைவாக கவர்ந்தவர்கள் என்ற விதத்தில், 6 போட்டியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொடுப்பட்ட விதிகளின் படி, சுமல்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் பிக்பாஸ் வீட்டார் யாரும் பேசக்கூடாது. அவர்கள் வேலை செய்யும் போது யாரும் உதவி செய்யக்கூடாது என்று பிக்பாஸ் கூறியிருந்தார்.

இருப்பினும், பிக்பாஸ் விதிமுறைகளை மீறி விசித்ரா, யுகேந்திரன் ஆகிய இருவரும் சுமல்பாஸ் வீட்டாருடன் சேர்ந்து சமைத்த நிலையில், அவர்கள் விதிமீறல் என்ற முறையில் சுமால்பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இதற்காக, கோவம் கொண்ட பிரதீப் ஆண்டனி யாரும் விதிகளை சரியாவே மதிக்கவில்லை, பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் போனால், கடனை அடைக்க சுமால்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் ஆகாத இரண்டு பேரை அனுப்ப சொல்லி கேட்டதால், விசித்ரா, பிரதீப் ஆகியோர் இடையில் வாக்குவாதம் வெடித்தது. இதனை தொடர்ந்து கேப்டன் இதனை தட்டி கேட்கவில்லை, என்று கூற விஜய் வர்மாவுக்கு, பிரதீப் ஆண்டனிக்கும் இடையே வாக்குவாதம் சூடுபிடித்தது.

இதன் நிலையில், 3வது நாளான இன்று பிக்பாஸ் வீட்டின் முதல் ப்ரோமோ வெளியானது. அதில், ‘நோ யுவர் ஹவுஸ்மெட்ஸ்” என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் விஷ்ணு மற்றும் மாயா ஆகிய இருவரும் மாறிமாறி மோதிக்கொள்கிறார்கள். முதலில் பேச்சை துவங்கிய மாயா, கமல் சாரோட நடிச்சிருக்கேனு சொல்ல, இவங்களுக்கு எப்படி யூடியூபில் இவ்வளவு வியூவர்ஸ் இருக்காங்கனு, சொல்றாங்கனு தெரியல…? என கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி, மாயா சக போட்டியாளருக்கு மதிப்பு கொடுக்காம பேசுறாங்கன்னு விஷ்ணு சொல்ல, பதிலுக்கு மாயா ‘அவன் என்ன எனக்கு மாமனா ..? மச்சானா..?’ என கேள்வி எழுப்ப மோதல் சூடுபிடித்தது.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: ஐயையோ..ஐஷு இல்லை அனன்யா..! பேர மாத்தி நாமினேட் செய்து..சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் விசித்ரா!

(Visited 32 times, 1 visits today)

Sharing is caring!