Sharing is caring!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசனில் இன்று வெளியான ப்ரோமோவில் பெண் போட்டியாளர்கள், விஜய் ஆண்டனியின் மீது கடும் கோவத்தில் இருப்பது தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டின் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பூர்ணிமா, மாயா, ரவீனா, வினுஷா, ஜோவிகா, ஐஷூ அனன்யா, விசித்ரா அக்‌ஷயா ஆகிய 9 பெண் போட்டியார்கள் மற்றும் பவா செல்லதுரை, மணி சந்திரா, பிரவீன், விஷ்ணு, கூல் சுரேஷ், சரவண விக்ரம், யுகேந்திரன், நிக்சன், விஜய் வர்மா ஆகிய 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களில், இந்த வாரம் எழுத்தாளர் பவா செல்லதுரை, அனன்யா, டான்ஸர் ரவீனா, ஐஷூ, வனிதா மகள் ஜோவிகா, பாடகர் யுகேந்திரன், நடிகர் பிரதீப் ஆண்டனி ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். ஓட்டின் அடிப்படையில் இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள். இந்த சீசன்களில் இரண்டு பிக்பாஸ் வீடு இருப்பதால், இரண்டு எலிமினேஷன் இருக்க வாய்ப்பிருப்பதாக ஒரு தரப்பு கூறி வருகிறது. மறுபுறம் இவர்களில், குறைவான ஓட்டுகள் யுகேந்திரன் வாசுதேவன் என்பவருக்கு இருப்பதால் இந்த முறை அவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க….Bigg Boss 7 Tamil: சண்டைக்கு வரியா..? விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாயா..சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில், டாஸ்க் அதிக அளவில் இருக்கும். அதன்படி, இன்றைய நாளில் ‘வெயிட் பார்ட்டி’ என்னும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்துகொள்ள வேண்டும். இந்த டாஸ்கில் எடை மிஷின் ஒன்று வைக்கப்படுகிறது. அதில், 340 கிலோ மதிப்புள்ள எடையில் போட்டியாளர்கள் நிற்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது. இதற்காக போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் எந்த பொருட்களை வேண்டுமானாலும், எடுத்துக் கொண்டு வந்து நிற்கலாம்.

மேலும் படிக்க..Bigg Boss 7 Tamil: ஐயையோ..ஐஷு இல்லை அனன்யா..! பேர மாத்தி நாமினேட் செய்து..சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் விசித்ரா!

இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் ஒரு நாள் முழுவதும் மேக்கப் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கான மேக்கப் பொருட்கள் அனைத்தும் உங்களிடம் இருந்து எடுத்து கொள்ளப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்ட பூர்ணிமா ரவி, அக்‌ஷயா மற்றும் மாயா ஆகியோர் தங்களுயை மேக்கப்பை நீங்குவது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் காண்பிக்கப்படுகிறது.
மறுபுறம், இந்த டாஸ்க்கில் நாம் தோற்பது நல்லது தான். அப்போதுதான், மேக்கப் இல்லாமல் போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளிப்படும் என்று பிரதீப் ஆண்டனி , கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால், பெண் போட்டியாளர்கள் விஜய் ஆண்டனியின் மீது கடும் கோவத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க….Bigg Boss 7 Tamil: சண்டைக்கு வரியா..? விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாயா..சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு..!

(Visited 52 times, 1 visits today)

Sharing is caring!