இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகண நிகழ்வு (ஏப்ரல் 8) நடைபெற உள்ளது. இந்த கிரகணம் சுமார் 4 மணி 39 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9:12 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2:22 வரை நீடிக்கும்.
முழு சூரிய கிரகண நிகழ்வு 2024:
சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் அல்லது சூரிய கிரகணம் நிகழ்கிறது. பொதுவான சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் பார்வையில், இரண்டுமே அசுபமாக பார்க்கப்படுகிறது.
இந்த முழு சூரிய கிரகண நிகழ்வின் போது நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும். இந்த நேரத்தில் நிலவு சூரியனை மறைத்து வைரம் போல் ஜொலிக்கும். இந்த அற்புத நிகழ்வு அட்லாண்டிக், அமெரிக்கா, வட அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடாவின் சில பகுதிகளில் தெரியும். ஆனால், இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் அல்லது ஆசியாவில் பார்க்க முடியாது.
கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்?
சூரிய கிரகணம் நிகழும் போது கர்ப்பிணிகள், இந்த நேரத்தில் உணவு எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இப்படி செய்வதால் ஜீரண சக்தி பலவீனமடைந்து நோய்வாய்ப்படுவார்கள் என்பது ஐதீகம்.
கிரகணம் முடிந்த பிறகு, குளித்துவிட்டு உணவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஜோதிடம் கூறுகிறது. கிரகண காலத்தில் அனைத்து உணவு மற்றும் தண்ணீரிலும் துளசி இலைகளை போட்டு வைக்க வேண்டும்.
கிரகணத்திற்கு பிறகு, கங்கை நீரை எடுத்து வீட்டின் மூலை, முடுக்குகளில் தெளித்து விட வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?
அதேபோன்று, இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதால், குழந்தை குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள், இந்த நேரத்தில் வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகணம் நிகழும் நேரத்தில் ஆலய தரிசனம் செய்ய வேண்டாம்.
கிரகண நாளில் எந்த சுப காரிய நிகழ்வையும் நடத்தக்கூடாது. கிரகணத்தின் போது நகங்களை வெட்டுவது, முடியை வெட்டுவது போன்ற செயல்களை செய்யாமல் இருக்க வேண்டும்.
கிரகணத்தின் போது தூங்க கூடாது. இருப்பினும், இவை எதற்கும் அறிவியல் ரீதியாக காரணங்கள் கிடையாது.