Sharing is caring!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த பிரச்சனையை சரிசெய்ய இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிக்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக காலமானார். அவருக்கு வயது 47 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இந்த மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், அவரின் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேனி பண்ணைபுரத்தில் நல்லடக்கம்:

இந்த நிலையில், இவரின் உடல் இன்று மாலை இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள இளையராஜா இல்லத்தில் உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு இளையராஜாவின் சொந்த ஊரான தேனி பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை காலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மேலும் படிக்க…Vijayakanth’s Funeral: விஜயகாந்த் அடக்கம் செய்த சந்தன பேழை விலை? எம்ஜிஆர், அண்ணா வழியில் நல்லடக்கம்!

பாடகியும் இசையமைப்பாளரான பவதாரிணி மரணத்திற்கு நடிகர் விஜய்யின் தாய், விஷால், கார்த்தி, சிவக்குமார். பாடகர் மனோ உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இளையராஜா -ஜீவா தம்பதிகளின் மகளான பவதாரிணி 1976ம் ஆண்டு பிறந்தவர். சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தேசிய விருது பெற்ற பவதாரிணி:

1984-ல் வெளியான மலையாள படமான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.1995 ஆம் ஆண்டு வெளியான ‘ராசய்யா’ படத்தில் இடம்பெற்ற மஸ்தானா, மஸ்தானா பாடல் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.பிரபல சினிமா பின்னணி பாடகியான பவதாரிணி ராமன் அப்துல்லா, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

பாரதி படத்தில் அவர் பாடிய ‘மயில் போல’ பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து, தேடினேன் வந்தது, அழகி, காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், கோவா, தாமிரபரணி, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

தனித்துவமான குரல் வளம் கொண்ட பவதாரிணி:

தனித்துவமான குரல் வளம் கொண்ட பவதாரிணி பாடிய, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா? என்னை தாலாட்ட வருவாளா போன்ற பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாதவை. இவர் பாடல்கள் பாடுவதை தாண்டி அமிர்தம், இலக்கியம், மாயநதி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அவர் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.கடைசியாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் யுவன் சங்கர் இசையில் ‘மெஹெரெசிலா, பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க…Vijayakanth’s Funeral: விஜயகாந்த் அடக்கம் செய்த சந்தன பேழை விலை? எம்ஜிஆர், அண்ணா வழியில் நல்லடக்கம்!

(Visited 40 times, 1 visits today)

Sharing is caring!