Sharing is caring!

Pradeep Redcard: 4 வாரத்தை கடந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும், பிக்பாஸ் சீசன் 7 பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

வழக்கம் போல், இந்த சீசனையும் கமல் அவர்களே தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி மற்றும் பவா செல்லத்துரை ஆகிய 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ, அர்ச்சனா ஆகிய 5 பேர் புதிதாக ‘வைல்ட் கார்டு’ போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

மேலும் படிக்க….Bigg Boss Updates: 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை வச்சு செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! வெளியான அதிரடி ப்ரோமோ!

நாமினேஷன் லிஸ்டில்:

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில், சுமால் பாஸ் வீட்டிலிருந்து கானா பாலா, அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ மற்றும் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஷு, மாயா, மணி , அக்ஷயா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அன்ன பாரதி தான் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஹவுஸ்மேட்ஸ் பிரதீப்பிற்கு எதிராக உரிமை குரல்:

இந்த வாரம் கொடுக்கப்பட்ட பெல் டாஸ்கில், பிரதீப் கூல் சுரேஷை கெட்ட வார்த்தையில் ஒருமையில் பேசியது இணையத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இவருக்கு எதிராக உரிமை குரல் கொடுக்க வேண்டும் என்று ஹவுஸ் மெட்ஸ் முடிவு செய்து இருந்தனர்.

ஹவுஸ்மேட்ஸ் பிரதீப்பிற்கு எதிராக உரிமை குரல்:

அதனடிப்படையில், இன்று நடந்த வீக் எண்ட் எபிசோடில் ஜோவிகா, மாயா, பூர்ணிமா, நிஸ்சன், ரவீனா, கூல் சுரேஷ், சரவணனை, மணி, அன்னபாரதி, விஸ்ணு ஆகியோர் உரிமை குரல் கொடுக்கிறார்கள்.

மேலும் படிக்க….Bigg Boss Updates: 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை வச்சு செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! வெளியான அதிரடி ப்ரோமோ!

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு:

இதில் முதலில் பேசிய ஜோவிகா, பிரதீப் கெட்ட வார்த்தைகள் தவறான நோக்கத்திற்கு யூஸ் பண்ணுவதாக கூறினார். பூர்ணிமா நைட் தூங்குவதற்கு பயமாக இருக்கிறது என்றார். மேலும், தொடர்ந்து பேசிய ரவீனா என்னுடைய அருணா கயிறு பற்றி எல்லாம் கமெண்ட் பாஸ் பண்ணி இருக்கிறார் என்று அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறினார்.

மேலும், மணி பேசும் போது பாத்ரூமை ஓபன் பண்ணி வைத்து யூஸ் பண்ணினார். கேள்வி கேட்டால் நான் அப்படி தான் யூஸ் பண்ணுவேன் என்று கூறியதாக சொன்னார். மேலும், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கலாமா என்று ஹவுஸ்மேட்ஸ்களிடம் கமல் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பெரும்பாலானவர்கள் பிரதீப்புக்கு எதிராக பேசி இருக்கிறார்கள். இதனடிப்படையில், பிரதீப்பிற்கு கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பிரதீப் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க….Bigg Boss Updates: 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை வச்சு செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! வெளியான அதிரடி ப்ரோமோ!

(Visited 69 times, 1 visits today)

Sharing is caring!