இன்றைய நவீன காலகட்டத்தில், ஆண்கள், பெண்கள் இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பெரும் மன உளைச்சலை தருகின்றது. நடைமுறை வாழ்வில் எப்போதும் முடி உதிர்தலை தவிர்ப்பதில் பெண்களை விட ஆண்களுக்குதான் அக்கறை அதிகம். இன்றைய ஆண்களுக்கு 30 வயதிலேயே வழுக்கை ஏற்படும் அளவில் முடி அதிக அளவில் கொட்டுகிறது. ஒரு சில சமயங்களில் ஆண்களின் திருமணம் தடை ஆவதற்குக் கூட முடி உதிர்வு மிக முக்கிய காரணமாக அமைகிறது. ஆண்களின் முடி உதிர்விற்கு பெரும்பாலும் மரபணுக்கள் மற்றும் மன அழுத்தம் முக்கிய காரணமாக அமைகின்றது.
முடி உதிர்வை கட்டுப்படுத்தும் உணவுகள்:
முடி உதிர்வை கட்டுப்படுத்த புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவு வகைகள் உட்கொள்வது அவசியம்.
புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டை, பருப்பு வகைகள், சிக்கன், இறைச்சிகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து முடி உதிர்வை குறைக்கும்.
மேலும், முளைகட்டிய பயிறு வகைகளை உண்பது அதிக அளவு புரத சத்து கிடைக்கிறது. அதேபோன்று, பால் சார்ந்த உணவு பொருட்களும் அதிக அளவு புரோட்டீன் சத்துக்களை வழங்குகிறது.
ஆப்பிள் சிடர் வினிகர்:
ஆரோக்கியமான கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்சனைக்கு ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு நீர் சேர்த்து அதை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பிறகு தலையை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
அதிகப்படியான உடல் சூடு முடி உதிர்வை அதிகரிக்கும். கோடை காலத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை குறைத்து முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் ஆற்றல் கடுகு எண்ணெய்க்கு உள்ளதாக சமீபத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது.
கடுகு எண்ணெய்:
கடுகு எண்ணெயில் உள்ள மைரோசின், எருசிக், பால்மிடிக் உங்களின் முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த எண்ணெய்யை முட்டையின் வெள்ளை கருவுடன் சேர்த்து தடவி மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் முடி அடர்த்தியாக மாறும். இப்படியாக, வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் தலையில் பொடுகால் ஏற்படும் அரிப்பு, முடி உதிர்வு கட்டுப்படுமாம்.