பிக்பாஸ் வீட்டில் புதிதாக 5 பேர் ‘வைல்ட் கார்டு’ போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் போட்டியாளர்கள் எண்ணிக்கை மீண்டும் 19 ஆக அதிகரிக்க துவங்கியுள்ளது.
வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றம்:
28 நாளை கடந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும், பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மற்ற சீசன்களை போல் இல்லாமல் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகள் எல்லாம் சூடு பிடிக்க துவங்கியது.
புதிதாக 5 பேர் ‘வைல்ட் கார்டு’ போட்டியாளர்கள்:
இதுவரை நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து புதிதாக 5 பேர் ‘வைல்ட் கார்டு’ போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், இவர்கள் நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்:
இவர்கள் 5 பேரும் ஒரே நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்ததை பார்த்து ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ், போதும் இதுக்கு மேல் அனுப்பாதீங்க, கேட்டை கொஞ்சம் லாக் பண்ணுங்க என்று பிக்பாஸிடம் கெஞ்சும் வீடியோ புரோமோவில் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து, போட்டியாளர்கள் எண்ணிக்கை மீண்டும் 19 ஆக அதிகரிக்க துவங்கியுள்ளது.
அதிரடியாக வெளியான முதல் ப்ரோமோ:
இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கேப்டன் பூர்ணிமா புதிய
வைல்ட் கார்டு போட்டியாளர்களான பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, கானா பாலா மற்றும் RJ பிராவோ ஆகியோர் சுமால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு, விஜே அர்ச்சனா கோவப்படுகிறார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்க துவங்கியுள்ளது.