Sharing is caring!

Indian 2 intro video: பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினி வெளியிட்டுள்ளார்.

நட்சத்திர பட்டாளம்:

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில், கமலுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தியன் தாத்தாவாக கலக்க வரும் கமல்:

இந்தியன் தாத்தாவாக கமல் கலக்கி இருக்கும் இந்தியன் 2 படத்தில், நிர்வாகத்தில் புரையோடிப் போயுள்ள லஞ்சத்தை ஒழிக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இதன் போஸ்ட் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முன்னதாக, இந்த படத்தில் கத்தியுடன் இருக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ தற்போது, படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ:

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ‘தெலுங்கில் ராஜமௌலியும், மலையாளத்தில் மோகன்லால் கன்னடத்தில் கிச்சா சுதீப் மற்றும் இந்தியில் அமீர்கான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

(Visited 40 times, 1 visits today)

Sharing is caring!