நவராத்திரி நாட்களில் வீட்டில் கொலு வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம்.
Navarathri 2023: நவராத்திரி என்றால் என்ன..?
புரட்டாசி அமாவாசையை தொடர்ந்து, நவராத்திரி பண்டிகை இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 15 முதல் 24 வரை அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி நாட்களில், சரஸ்வதி பூஜை வரும் 23ம் தேதியும், விஜயதசமி விழா வரும் 24ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. வடக்கில் ‘தசரா’ என்ற பெயரில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களும் வீட்டில் விரதம் இருந்து, கொலு வைத்து சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கு பூஜை செய்து, வழிபட்டால் சுபிக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம்.
நவராத்திரி விழாவில் வணங்க வேண்டிய தெய்வங்கள்:
பெண் தெய்வங்களை ஆராதிக்கும் விழாவான நவராத்திரி வழிபாட்டில், கீழ்க்கண்ட 9 அம்பாள்களை விரதம், இருந்து தரிசிப்பது கோடி புண்ணியம் அளிக்கும் என்கிறது. லலிதோபாக்யானம், உண்ணாமலை அம்பிகை, காமாட்சி, பர்வதவர்த்தினி மீனாட்சி பகவதி அம்மன், விசாலாட்சி, கற்பாகம்பிகை, ஞானப் பிரசுனாம்பிகை, அகிலாண்டேஸ்வரி இந்த நவதேவிகளில் ஒவ்வொரு நாளும், ஒருவரையாவது தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நவராத்திரி வழிபாட்டின் பலன்கள்:
நவராத்திரி நாட்களில், அம்மனின் இந்த 9 அவதாரங்களை பூஜை செய்து ஒவ்வொரு நாளும் வணங்கினால் மனதில் தைரியம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட ஆயுள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும். கல்வி வளர்ச்சி நன்றாக இருக்கும். உங்கள் அறிவு ஆற்றல் வளரும்.
நேரம், காலம் நெய்வேத்தியம்:
இந்த நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறமான ஆடை மற்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதம் அம்மனுக்கு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து நவராத்திரி பூஜை செய்யலாம். குறிப்பாக, ராகு காலம், எமகண்டம் நேரத்தில் இந்த பூஜை செய்ய வேண்டும்.