இந்த ஆண்டின் கடைசி சனி அமாவசை வரும் அக்டோபர் 14ம் தேதி நிகழவுள்ளது. இதனை, ‘சர்வ பித்ரா’ அமாவாசை என்று ஜோதிடர்கள் அழைக்கின்றனர். இதற்கு அடுத்தநாள், அதாவது அக்டோபர் 15ம் தேதி நீதியின் கடவுளான சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். இவர், வரும் நவம்பர் 4ம் தேதி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையும் வரை அதே இடத்தில் இருப்பார். சனி பகவான் மட்டுமே அவரவர் செயல்களுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமைகளை தருகிறார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருந்தாலும், மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு உள்ளிட்ட ராசிகளுக்கு நேரம் சாதகமாக இருக்கும். அவை என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் அருளால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை, தொழிலில் லாபம் கூடும். செலவுகள் குறையும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் அருளால், நண்பரின் உதவியால் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். கடன் தொல்லை நீங்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமணம் நிச்சயப்படலாம்.
மிதுனம்:
மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயத்தில் முழு ஆதரவு கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். வேலை, தொழில் நிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் பழைய நண்பர்களை சந்திக்கலாம். வருமானம் உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.