Latest Bigg Boss 7 Tamil: Red Card Given to Vijay Varma: பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் வர்மா மற்றும் பிரதீப் ஆண்டனி அடித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 -வது சீசன் துவங்கி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ‘டாஸ்குகள்’ கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் மத்தியில் கடும் வாக்குவத்தை துவங்கியது பிக்பாஸ். மற்ற சீசன்களை போல் அல்லாமல், இந்த முறை பிக்பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை எல்லாம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் எங்கிருந்து எப்படி பிரச்சினை வெடிக்குமோ என்றே தெரியவில்லை. மிகவும் பரபரப்பாக நகர்ந்து வரும் பிக்பாஸ் 7 வது சீசனில் இன்று நடந்த டாஸ்க் பெரிய அடிதடி சண்டையில் முடிந்து இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை:
இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க் அடிப்படையில், பிக்பாஸ் வீடு மற்றும் ஸ்மால்பாஸ் வீடு ஆகிய இரண்டு வீடுகளில் யாரிடம் அதிக சிலிண்டர்கள் இருக்கிறதோ அவர்கள் போட்டியின் வெற்றியாளர்கள் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தது. இதனால் இரண்டு வீட்டினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு, அடிதடி துவங்கியது. அதில் கண்ணாடி கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும், கை, கால்களில் காயத்துடன் ஹவுஸ்மெட்ஸ் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதையடுத்து, டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் துவங்கியது.
விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு:
டாஸ்க் துவங்கியவுடன் பிரதீப் ஆண்டனியை விஜய் வர்மா தூக்கி தரையில் போடுகிறார். இதனால், பிரதீப்பின் தலையில் பலமான அடிபடுகிறது. வீட்டிற்குள் இருந்த மற்றவர்கள் பதற்றத்துடன் ஓடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். எனவே, முரட்டுத்தனமாக தாக்கிய விஜய் வர்மாவுக்கு ‘ரெட் கார்டு’ கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தரப்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றனர்.