Sharing is caring!

Leo Pre Booking Ticket Sale: விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம் ஜெயிலரின் ப்ரீ புக்கிங் வசூலை, முறியடித்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

லியோ திரைப்படம், விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இதனால், பல வருடங்களுக்கு பிறகு கில்லி படத்தின் த்ரிஷாவை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும்…Leo Movie Trailer: 2 மணி நேரத்தில் மாஸ் காட்டிய விஜய்..! ரத்தம் சொட்ட…சொட்ட தெறிக்க விடும் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர்..!

அனிருத் இசையில் பாடல் சூப்பர் ஹிட்:

அனிருத் இசையமைப்பில், ஏற்கனவே இந்த படத்தின், போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக, ”நா ரெடி தான் வரவா” பாடல் (Naa Ready ) Youtube தளத்தில் 100 மில்லியன் பார்வையார்களை கடந்து வெற்றி நடை போடுகிறது.

நட்சத்திர பட்டாளம்:

மேலும், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், பகத் பாசில் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி இந்திய திரை நட்சித்திர பட்டாளமே இந்த லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும்…Leo Movie Trailer: 2 மணி நேரத்தில் மாஸ் காட்டிய விஜய்..! ரத்தம் சொட்ட…சொட்ட தெறிக்க விடும் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர்..!

லியோ படத்தின் சிறப்பு காட்சி:

அக்டோபர் 19ம் தேதி லியோ படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் சிறப்பு காட்சி பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதையடுத்து, லியோ படத்தின் சிறப்பு காட்சிகளை காலை 9 மணிக்கு துவங்கி, இரவு 1.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறப்பு காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்…Leo Movie Trailer: 2 மணி நேரத்தில் மாஸ் காட்டிய விஜய்..! ரத்தம் சொட்ட…சொட்ட தெறிக்க விடும் ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர்..!

ஜெயிலர் படத்தின் ‘ப்ரீ புக்கிங்’ வசூலை முறியடித்த லியோ:

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள, லியோ திரைப்படம் விஜய்க்கு முதல் நாளில் ரூ 100 கோடி வசூல் செய்யும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை காட்டிலும், ப்ரீ புக்கிங்கில் லியோ திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

வெளிநாடுகளில் மாஸ் காட்டிய லியோ:

வெளிநாடுகளில் எல்லாம் ‘ப்ரீ புக்கிங்’ வசூல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோ திரைப்படத்திற்கு இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகளிலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. மேலும், லியோ திரைப்படம், உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 28 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளதாம். எனவே,லியோ திரைப்படம் விஜய்க்கு முதல் நாளில் ரூ 100 கோடி வசூல் செய்யும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க….Wild Card Entry In BB: அடடே..! பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைவது இந்த நடிகையா..?

(Visited 61 times, 1 visits today)

Sharing is caring!