Chandra Grahan 2023: இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் அக்டோபர் தேதி 28 ம் தேதி இரவு 1.05 மணி முதல் 29ம் தேதி காலை 2.24 மணி வரை நடைபெற உள்ளது.
கடந்த அக்டோபர் 14ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. ஆனால், நாளை நிகழும் சந்திர கிரகணம் பகுதி நேரமாக இந்தியாவில் தெரிய உள்ளது.
சந்திர கிரகணம் 2023:
சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. பொதுவான சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். பொதுவான சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் பார்வையில், இரண்டுமே அசுபமாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த சந்திர கிரகணம் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். இருப்பினும், இந்த சந்திர கிரகணம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சுபமாக இருக்கும் அவை என்னென்னெ ராசிகள் என்பதை பார்ப்போம்.
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, தொழிலில் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். நிதிப் பற்றாக்குறை இருக்காது. உங்கள் தொழிலுக்கு நல்லதாக இருக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
மகரம்:
பொருளாதார ரீதியாகப் நல்ல பலன் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். காதல் உறவுகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலத்தில் வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, சமூகத்தில் மரியாதை, கௌரவம் உயரும். பெரியவர்களுடன் உறவை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு இந்த நாளில் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும்.