
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் 2023:
அக்டோபர் 14 அன்று ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம், அக்டோபர் 28ம் தேதி இரவு நடைபெற இருக்கிறது.
மேஷ ராசியில் இன்று இரவு சந்திர கிரகணம் 2023:
இந்தியாவில் சந்திர கிரகணம் மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் நாளை இரவு 1.05 மணி முதல் 28ம் தேதி காலை 2.24 மணி வரை நிகழ உள்ளது.

சூரிய கிரகணம் 2023:
சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் அல்லது சூரிய கிரகணம் நிகழ்கிறது. பொதுவான சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆனால், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். பொதுவான சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் பார்வையில், இரண்டுமே அசுபமாக பார்க்கப்படுகிறது.

இதனால், பல கோவில்களில் நடை இந்த நாளில் சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடை 28 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 29 ஆம் தேதி காலை 5 மணி வரை அடைக்கப்பட இருக்கிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா நாடுகளிலும் அரைக்கோளத்தின் சில பகுதிகளில் தெரியும்.
கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை:

கிரகணம் நிகழும் நேரத்தில் பூஜை அறையில் தரிசனம் செய்ய வேண்டும்.
அமாவாசை நாளில் சூரிய உதயத்திற்கு முன்பாக புனித நதியில் நீராடுங்கள்.
சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் மற்றும் கருப்பு எள்ளை படைத்து வழிபாடு நடத்தலாம்.
வீட்டில் இருக்கும் உணவில் துளசி இலைகளை போட்டு வைக்க வேண்டும்.
கிரகணத்திற்கு பிறகு, கங்கை நீரை எடுத்து வீட்டின் மூலை, முடுக்குகளில் தெளித்து விட வேண்டும்.
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை:

சந்திர கிரகணம் நிகழும் போது சமையல் செய்யக் கூடாது.
சந்திர கிரகணம் நிகழும் போது உணவு எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சந்திர கிரகண நிகழும் நேரத்தில் உடலுறவு கொள்வதால், குழந்தை குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

கிரகணம் நிகழும் போது, மக்களை விட கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, கிரகணம் நிகழும் நேரம் கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது. இல்லையென்றால், அதன் கதிர்வீச்சு கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை தாக்கி பாதிப்பை உண்டாக்கும்.