Sharing is caring!

Big Boss Elimination: வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய இரண்டு பேர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

இந்த முறை, இரண்டு வீடு கான்செப்ட்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் ஒவ்வொரு நாளும் பல அதிரடி திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த முறை, ‘இரண்டு வீடு கான்செப்ட்’ உள்ளிட்ட புதுமையான பல விஷயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள்:

அதேபோல், இந்த சீசனில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களை வர இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். இவர்கள் நாளை வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் வர உள்ளனர். இதனால், நாளை மூன்று மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட இருக்கிறது.

மேலும் படிக்க….bigg boss 7: பிக்பாஸ் வீட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரதீப் மற்றும் ஜோவிகா! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!

மூன்று போட்டியாளர்கள் எலிமினேஷன்:

அந்த ஐந்து பேர் யார் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, இந்த வாரம் எலிமினேட் ஆக போவது யார் என்றும் கேள்வி இருக்கிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், 3 வாரத்தை கடந்து தற்போது 15 போட்டியாளர்களுடம் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க….bigg boss 7: பிக்பாஸ் வீட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரதீப் மற்றும் ஜோவிகா! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!

நாமினேஷம் லிஸ்டில்:

இந்த வாரம் நாமினேஷம் லிஸ்டில், நிக்சன், மணி, மாயா, வினுசா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ஜோவிகா, பிரதீப், விஷ்ணு, யுகேந்திரன் மற்றும் அக்ஷயா ஆகிய 11 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்:

இவர்களில் அதிகபட்ச வாக்குகளுடன் பிரதீப் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்ற அடிப்படையில், குறைவான வாக்குகளுடன் வினுஷா, யுகேந்திரன், அக்ஷயா ஆகியோர் கடைசி இடத்தில் இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வினுஷா தான் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய இரண்டு பேர் தான் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க….bigg boss 7: பிக்பாஸ் வீட்டில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரதீப் மற்றும் ஜோவிகா! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!

(Visited 22 times, 1 visits today)

Sharing is caring!