பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட பூகம்பம் டாஸ்க் ஒன்றில், நடிகை விசித்ரா, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து கண்ணீர் மல்க பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 90களில் பிரபல குணசித்திர நடிகை விஜித்திரா 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகி இருந்து அவர், குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகியுள்ளார்.குக்வித் கோமாளி ஷோ மூலம் மீண்டும் பிரபலமான இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் முக்கிய போட்டியாளராக இருந்துள்ளார்.
இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பூகம்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசினார்கள்.
தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை:
இதில் நடிகை விசித்ரா நடிகர் ஒருவரால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசி இருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
அதில், அவர் கடந்த 2001 ஆம் ஆண்டில், ஹீரோ ஒருவரது படத்தில் நடித்தபோது, அவர் இரவு என்னை அவரது அறைக்கு வரச் சொன்னார். அவரை நான் சந்திக்க மறுத்ததில் இருந்து நான் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டேன்.
அப்போது, அங்கு மேனேஜராக இருந்த என்னுடைய கணவர்தான் எனக்கு ரொம்ப உதவி செய்தார். என்னை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையில் என்னை தங்க வைத்தார். இருப்பினும், அந்த நடிகரின் ஆட்கள் மது போதையில் என்னுடைய ரூம் கதவை தட்டி கொண்டே இருப்பார்கள் என்று கூறினார்.
படப்பிடிப்பில் என்னை ஒருவர் தவறான முறையில் தொட்டார்:
அதுமட்டுமின்றி, படப்பிடிப்பில் என்னை ஒருவர் தவறான முறையில் தொட்டார். உடனடியாக நான் அவரை பிடித்து படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் சென்று புகார் கொடுத்தேன். ஆனால், அவர் என் கன்னத்தில் பளார் என அறைந்தார்.
இதைப்பற்றி, நான் சங்கத்தில் புகார் கொடுத்ததும் யாரும் நடவடிக்கையை எடுக்காததால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.இதனை கேட்டு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் விஜித்திராவுக்கு ஆறுதல் கூறி கண் கலங்குகின்றனர்.
விசித்ராவை ரூமுக்கு வா என அழைத்த, தெலுங்கு நடிகர்?
இந்நிலையில், விசித்ராவை ரூமுக்கு வா என அழைத்து, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணானு அவரை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டர் விஜய்னு கூறி இணையத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ஏனெனில், கதையில் விசித்ரா கூறிய விஷயங்களும், கடந்த 2001-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ஒன்றில் காட்சிகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி, இந்த படத்தில் நடிக்கும்போது தான் விசித்ராவுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கருத்துகளும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.