Elimination Bigg Boss 7: பிக்பாஸ் 7 சீசனில் முதல் முறையாக ஏற்கனவே, வெளியேற்றப்பட்ட 8 பேரில் 2 பேர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வர உள்ளனர். இதனால், இந்த முறை அகஷ்யா, பிராவோ ஆகிய இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பிரதீப் ரெட் கார்டு வெளியேற்றதற்கு பின்னர், பல்வேறு விவாதங்கள் எழுந்தது. இதையடுத்து, சூடு பிடிக்க துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரமே டிஆர்பியில் பலத்த அடி வாங்கியது.
பிக்பாஸ் பூகம்பம் டாஸ்க்:
இதனால், எப்படியாவது டிஆர்பி-யை எகிற வைக்கும் முனைப்பில், இந்த வாரம் பிக்பாஸ் பூகம்பம் டாஸ்க் ஒன்றை அறிவித்தார்.
மொத்தம் 3 பூகம்பம் டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் வெற்றிபெற்றால் எந்தவித பிரச்சனையும் இல்லை.
ஆனால், தோல்வியுற்றால், ஏற்கனவே வெளியேற்றப்பட்ட 8 பேரில் 3 பேர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வர உள்ளனர் என்று கூறி ஷாக் கொடுத்தது பிக்பாஸ். இதையடுத்து, நடத்தப்பட்ட மூன்று பூகம்பம் டாஸ்க்குகளில் ஒன்றில் மட்டுமே ஹவுஸ்மேட்ஸ் வெற்றி பெற்றனர். மற்ற இரண்டில் தோல்வி அடைத்தன.
வைல்ட் கார்டு எண்ட்ரியாக இரண்டு போட்டியாளர்கள்:
இதனால், இந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக இரண்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் வருவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, இந்த சீசனில் முதல் முறையாக இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கும் 8 பேரில் விசித்ரா, அர்ச்சனா, மணி ஆகியோர் மக்களிடம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, ரவீனா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
இவர்களின் குறைவான வாக்குகள் பெற்று மாயா மற்றும் பூர்ணிமா தான் கடைசி இடத்தை பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிக்பாஸ் 7 வீட்டில் டபுள் எவிக்ஷன்:
ஆனால், இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் டபுள் எவிக்ஷன், என்ற அடிப்படையில் அகஷையா, பிராவோ, என இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே வெளியேற்றப்பட்ட 8 பேரில் 2 பேர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வர உள்ளனர். யார் அந்த இரண்டு பேர் என கமெண்டில் சொல்லுங்கள்.