Hair loss problem: முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக, மன அழுத்தம் மற்றும் மரபணு மாற்றம் முக்கிய காரணமாக இருக்கிறது. சில சமயங்களில் தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது மேலை நாட்டு உணவு பழக்கவழக்கம் போன்றவையும் முக்கிய காரணமாக அமைகிறது.
முருங்கை விதை எண்ணெய்:
உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தம் ஆற்றல் முருங்கை விதை எண்ணெய்க்கு உள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதில் உள்ள கால்சியம், இரும்பு சத்து, போலிக் ஆசிட், ஈகோசெனோக், பால்மிடிக் உங்களின் முடி உதிர்வுக்கு முற்று புள்ளி வைக்கும். வாரத்திற்கு, ஒருமுறை இந்த எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
முடி உதிர்வு இருக்கும் போது புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் கொண்டிருந்தால் நீங்கள் அதை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில், இவைகள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை குறைக்க செய்யும். இது முடி வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கி முடி உதிர்வை அதிகரிக்கிறது.
முடி உதிர்வுக்கு மன அழுத்தம்:
முடி உதிர்வுக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக அமைகின்றது. கவலை, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவைதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைத்து மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
யோகா, மூச்சுப்பயிற்சி:
யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வதாலும் மன அழுத்தம் குறைந்து ஹார்மோன் சமநிலை அடைகிறது. இதனால் முடி உதிர்வு கட்டுப்படும்.
அதிகப்படியான முடி உதிர்வுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ கூட காரணமாக இருக்கலாம். ஆம், அதில் கலக்கப்படும் ரசாயனக் கலவைகள் முடி உதிர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம். எனவே, ஆல்கஹால் அதிகம் நிறைந்த வேதிய ராசயங்கள் உள்ள ஷாம்பூகளை தவிருங்கள்.