Sharing is caring!

மேலும் படிக்க….Trisha Salary: லியோ வெற்றிக்கு பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய த்ரிஷா!

லியோ:

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலி கான் மோசமான பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ.

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு:

இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஒரு சிறு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இதையடுத்து, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் லியோவில் த்ரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் எதிர்பார்த்தேன்.

த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இல்லை:

ஆனால், த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் ஏதும் ஒதுக்கவில்லை என எல்லை மீறி பேசியிருந்தார்.

தன்னை பற்றி கேவலமாக பேசிய மன்சூர் அலிகானுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷா, இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க….Trisha Salary: லியோ வெற்றிக்கு பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய த்ரிஷா!

அதில் அவர், மன்சூரின் பேச்சு பெண்கள் மீதான மோசமான ரசனையை காட்டுவதாகவும், மேலும் இது பெண்களுக்கு எதிரான, அருவருப்பான, மோசமான ஒரு பேச்சாகவும் இருக்குது.

இவரை போன்ற மோசமான ஒருவருடன் நான் இதுவரை நடித்ததில்லை. அவரை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயர் ஏற்படுத்துவதாகும், இருக்கிறார்கள். இனி ஒருபோதும் அவருடன் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் கண்டனம்:

நடிகை திரிஷா குறித்து மோசமான வகையில் மன்சூர் அலி கானுக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான் கூறிய கருத்துக்கள் மோசமானதாகவும், கோபமடைய வைப்பதாகவும் இருக்கிறது.

பெண்கள், சக கலைஞர்களுக்கு உரிய மரியாதை தரப்பட்ட வேண்டும். இதை சமரசம் செய்து கொள்ளவே முடியாது. அவரது இந்த பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாளவிகா மோகம் இவர் பெண்களை இப்படி பார்ப்பது மிகவும், வெட்கக்கேடானது.

இதன் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பேசுவதை பார்க்கும் போது மிகவும் அவமானமாக உள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் ஏற்கனவே புகார் அளித்ததை குறிப்பிட்டு குஷ்பூ பெண்களை காக்கவும், கண்ணியமாக நடத்தவும் தான் போராடுவதாக கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்:

தென்னிந்திய நடிகர் சங்கமும் இதற்கான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மூத்த நடிகர் மன்சூர் அலி கான் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சர்ச்சை தொடர்ந்து வந்த நிலையில், மன்சூர் அலிகான் இதுகுறித்து விளக்கம் அளித்தார். இதில் நான் எப்போதும் என்னுடைய சக நடிகர்களுக்கு மரியாதை கொடுப்பேன்.

நான் பேசியது திட்டமிட்டே தவறாக சித்தரித்து கட் செய்து தவறாக பரப்புகின்றனர். இருப்பினும், என்னுடைய பேச்சால் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க….Trisha Salary: லியோ வெற்றிக்கு பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய த்ரிஷா!

(Visited 35 times, 1 visits today)

Sharing is caring!