Sharing is caring!

Big Boss Tamil Season 7: இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளர்கள் மத்தியிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்திய 6 சர்ச்சைக்குரிய சம்பவங்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க….Bigg Boss Elimination: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா..! ஷாக்கில் போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் வீட்டில் சர்சையை ஏற்படுத்திய 6 சம்பவங்கள்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 3 வாரத்தை கடந்து தற்போது 16 போட்டியாளர்களுடம் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த முறை, ஆரம்பத்திலே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் செய்யும் விஷயங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.

பவ செல்லத்துரை கூறிய பாலச்சந்திரன் கதை:

முதல் வாரத்தில் வெளியேறிய பிரபல எழுத்தாளர் ‘பவ செல்லத்துரை’, கதை கூறும்போது, பிரபல இயக்குனர் பாலச்சந்திரன், ஊறுகாய் விற்ற பெண்ணின் இடுப்பை பிடித்தாக அவரின் ‘சிதம்பர நினைவுகள்’ என்ற புத்தகத்தில் எழுதியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிகழ்வு, பார்வையாளர்கள் மத்தியிலும் கடும் சலசலப்பை ஏற்படுத்துயது.

மேலும் படிக்க….Bigg Boss Elimination: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா..! ஷாக்கில் போட்டியாளர்கள்..!

விஜய் வர்மாவிற்கு வார்னிங்க் கார்டு:

அதேபோல், முதல் வாரமே கேப்டனாக பதவி ஏற்ற விஜய் வர்மா, பிரதீப் ஆண்டியை
வாய உடைச்சுருவேன் ‘வெளியே வா உன்ன பாத்துக்குறேன்’ என்ற தொனியில் மிரட்டியதால், அவருக்கு வார்னிங்க் கார்டு கொடுக்கப்பட்டது.

விசித்ரா உடலை மோசமாக வர்ணித்த கூல் சுரேஷ்:

இதையடுத்து, கூல் சுரேஷ் விஜித்திராவின் நீங்க மீன ராசியா? இல்லை யானை ராசியா? என்று கூறியது கடும் சர்சையானது. இதையடுத்து அவர் விசித்ராவின் அவர் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டார். அதேபோல், கூல் சுரேஷ் மாயாவிடம் கண் ஜாடையில் பேசியதற்கு மாயா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

பிரதீப் ஆண்டயை கடுமையாக தாக்கிய விஜய் வர்மா:

இதையடுத்து, மூன்றாவது வாரத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் விஜய் வர்மா சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனியின் தலையில் கடுமையாக தாக்கினர். இதனால், அவருக்கு ‘ரெட் கார்டு’ கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வாரம் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார்.

வினுஷாவின் உடலை மோசமாக வர்ணித்த நிக்சன்:

இந்த நிலையில், தற்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக வந்திருக்கும் நிக்சன் தன்னுடைய சக போட்டியாளரான வினுஷாவின் உடல் அமைப்பு பற்றி மற்றொரு போட்டியாளரான ஐஸுவிடம் விமர்சித்து உள்ளார். அதில் அவர், தனக்கு வினுஷாவின் உடல் அமைப்பு பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், சக போட்டியாளர்களும் ஒருவரான பூர்ணிமா ரவி போல் இருக்கும் உடல் அமைப்பு பிடிக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் தரப்பில் கண்டங்கள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க….Bigg Boss Elimination: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா..! ஷாக்கில் போட்டியாளர்கள்..!

(Visited 16 times, 1 visits today)

Sharing is caring!