Sharing is caring!

Bigg Boss Season 7 Elimination: விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 3 வாரத்தை கடந்து தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் நிழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே டாஸ்க் எல்லாம் சூடு பிடிக்க துவங்கியது. வேறு எந்த சீசனிலும் இல்லாமல் இந்த முறை ‘இரண்டு வீடு கான்செப்ட்’ கொண்டு வரப்பட்டது. இதில், கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட யுகேந்திரன், பிரதீப், மாயா,வினுஷா, விஸ்ணு, பூர்ணிமா, சரவண விக்ரம் ஆகிய ஆறு பேரை தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

மேலும் படிக்க…பிக்பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை…பிரதீப்பிற்கு மண்டையில் அடி… விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு..! வைரல் வீடியோ..!

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில்:

பிக்பாஸ் விதிமுறைப்படி, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்ய வேண்டும். அதனடிப்படையில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில், நிக்சன், அக்‌ஷயா, மணி, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க…பிக்பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை…பிரதீப்பிற்கு மண்டையில் அடி… விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு..! வைரல் வீடியோ..!

இந்த 3 வது வாரம் எலிமினேஷன் யார்..?

பிக்பாஸ் வீட்டின் முதல் வாரத்தில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா ராவ் வெளியேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தனக்கு நெஞ்சு வலிக்கிறது தன்னால் இங்கு இருக்க முடியாது என்று கூறி ‘பவா செல்லத்துரை’தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், இரண்டாவது வாரத்தில் ‘நோ எலிமினேஷன்’ என்று பிக்பாஸ் அறிவித்தது. இதையடுத்து, தற்போது 3 வாரத்தில் இந்த 11 போட்டியாளர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஓட்டிங் அடிப்படையில் விணுஷா தான் குறைவான வாக்குகளை பெற்றிருந்தார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்தில், கொடுக்கப்பட்ட டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் அடிதடி சண்டையில் போய் முடிந்தது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் சிலிண்டர்கள் சேகரிப்பு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அடிதடி சண்டையில் முடிந்த சிலிண்டர்கள் டாஸ்க்:

பிக் பாஸ் வீடு மற்றும் ஸ்மால்பாஸ் வீடு ஆகிய இரண்டு வீடுகளில் யாரிடம் அதிக சிலிண்டர்கள் இருக்கிறதோ அவர்கள் போட்டியின் வெற்றியாளர்கள் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தது. இதனால், இரண்டு வீட்டினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு, அடிதடி துவங்கியது. அதில் கண்ணாடி கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. போட்டியாளர்கள் கை, கால்களிலும் காயம் ஏற்பட்டது.

விஜய் வர்மா எலிமினேட்:

டாஸ்க் துவங்கியவுடன் பிரதீப் ஆண்டனியை விஜய் வர்மா கடுமையா தாக்கினர். வீட்டிற்குள் இருந்த மற்றவர்கள் பதற்றத்துடன் ஓடி வருகின்றனர். இதையடுத்து, பிரதீபிற்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டது. எனவே, இப்படி முரட்டுத்தனமாக தாக்கிய விஜய் வர்மாவுக்கு ‘ரெட் கார்டு’கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் வர்மா வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார்.

மேலும் படிக்க…பிக்பாஸ் வீட்டில் அடிதடி, சண்டை…பிரதீப்பிற்கு மண்டையில் அடி… விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு..! வைரல் வீடியோ..!

(Visited 28 times, 1 visits today)

Sharing is caring!