Bigg Boss Wild Card Entry: பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 புதிய போட்டியாளர்கள் ‘வைல்ட் கார்டு என்ட்ரி’ மூலம் வீட்டிற்குள் வர உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.
இரண்டு வீடு கான்செப்ட்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற சீசன்களை போல் இல்லாமல் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகள் எல்லாம் சூடு பிடிக்க துவங்கியது. இந்த முறை, ‘இரண்டு வீடு கான்செப்ட்’ கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்று பிக்பாஸ் வீடு என்றும், மற்றொன்று ஸ்மால் பாஸ் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
நாமினேஷம் லிஸ்டில்:
இந்த வாரம் நாமினேஷம் லிஸ்டில், நிக்சன், மணி, மாயா, வினுசா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ஜோவிகா, பிரதீப், விஷ்ணு, யுகேந்திரன் மற்றும் அக்சரா ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
அடிதடி சண்டையில் முடிந்த டாஸ்க்:
அதேபோல், இந்த வாரம் கொடுக்கப்பட்டு டாஸ்க் எல்லாம் போட்டியாளர்கள் மத்தியில் அடிதடி சண்டையில் போய் முடிந்தது. இதில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுபவர், 6 போட்டியாளர்களை தேர்வு செய்து ஸ்மால் பாஸ் அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. இதுவரை மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டின் முதல் வாரத்தில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா ராவ் வெளியேறியுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக தனக்கு நெஞ்சு வலிக்கிறது தன்னால் இங்கு இருக்க முடியாது என்று கூறி ‘பவா செல்லத்துரை’ தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், இரண்டாவது வாரத்தில் ‘நோ எலிமினேஷன்’என்று பிக்பாஸ் அறிவித்தது.
இவருக்கு அடுத்தபடியாக, கடந்த வாரத்தில் விஜய் வர்மா குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
வைல்டு கார்டு என்ட்ரி:
இதனால் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு ‘வைல்டு கார்டு என்ட்ரி’ இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில், 5 புதிய போட்டியாளர்கள் வருவதாக கமல் தெரிவித்துள்ளார். இவர்கள் வரும் (ஞாயிற்று கிழமை) 29ம் தேதி வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் வர உள்ளனர். இதன் மூலம், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
அதன்படி, ராஜா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் பிரபல கானா பாடகர் கானா பாலா ஆகிய இருவரும் கலந்துகொள்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.