Happy New Year Resolutions: கிபி 45ம் நூற்றாண்டில் தான் முதன் முதலில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அன்று ஒரு நிலவு பூமியை சுற்றி வரும் காலத்தை வைத்தே காலத்தையும் வருடத்தையும் கணக்கிட்டு வந்தனர். அதற்கு முன்பு வரை மார்ச் மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ரோமானிய கடவுளான ஜான்ஸ்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூனியர் சீசர் இதனை மாற்றியமைத்தார். 1582ம் ஆண்டு போப் கிரிகோரி சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஜனவரி 1ம் தேதி முதல் நாளாக புத்தாண்டாக கொண்டாட துவங்கினர். அப்பொழுது தான் ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கீடு வந்தது.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறக்கும் போது, இந்த வருடம் நான் ‘பிட் ஆவேன்’ , ‘அதிக பயணங்களை மேற்கொள்வேன்’, ‘குடி பழக்கத்தை கைவிடுவேன்’, ‘புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவேன்’ என்று ஒவ்வொருவரின் புத்தாண்டு தீர்மானங்கள் ஏராளம். ஆனால், ஒரு சில மாதங்கள் கடந்ததும் அவை மறந்து போய் விடும். இருப்பினும், புத்தாண்டு நாளில் உறுதிமொழி எடுப்பது கட்டாயம் அல்லவா. இன்று முதல் 2024ஆம் ஆண்டு எந்த நல்ல பழக்கத்தை பின்பற்ற போகிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்.
நியூ இயர் ரெசல்யூஷன் பின்பற்ற வழிமுறைகள்!
- இலக்கு திட்டவட்டமான இருக்க வேண்டும்.
- ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
- நடக்கக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும்.
நீங்கள் எடுக்கும் நியூ இயர் ரெசல்யூஷன் இந்த வருட இறுதியில் உங்களுடைய சாதனைகள் பற்றி நீங்கள் ‘பாசிட்டிவ்’ வாக உணர வைக்க வேண்டும்.
உங்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவதை மன அழுத்தமாக உணரக்கூடாது, மாறாக உங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
அப்படி என்றால்? இன்றே உங்களது ‘நோட் புக்கை’ எடுத்து எந்த கால இடைவெளியில் உங்களது இலக்கை எப்படி அடைய வேண்டும் என்பதை குறித்து கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் தீர்மானங்களைத் நிறைவேற்றும்போது, சில நேரம் பின்னடைவை சந்திக்க நேரிடலாம், சோர்வு தோன்றலாம் இதுபோன்ற சமயங்களில், இந்த இலக்கை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை நினைவூட்டிக் கொள்வது அவசியம்.
எவ்வளவு பெரிய மற்றும் சிறிய இலக்குகளாக இருந்தாலும் நீங்கள் அதை சாதிக்கும் பொழுது உண்டாகும் பெருமிதமும், வெற்றி களிப்பும் வேறு எதற்கும் ஈடாகாது.
உங்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டு வெற்றி ஆண்டாக மாற வாழ்த்துக்கள்!