
60 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் 7ல் ஒவ்வொரு நாளும் அதிரடியான பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. வார இறுதி நாட்கள் வந்தாலே, இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
மேலும் படிக்க…Karakattakaran Kanaka: பல வருடங்களுக்கு பிறகு நடிகை கனகாவை சந்தித்த குட்டி பத்மினி!
இந்த வாரம் ஜோவிகா வெளியேற்றம்:
அதன்படி, தற்போது வனிதாவின் மகள் என்ற அடையாளத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜோவிகா தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆரம்பத்தில், மிகவும் சிறப்பாக ஆடிவந்த ஜோவிகா டாப் 5குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.
3 முறை கேப்டன் டாஸ்கில் தோல்வி:

ஆனால், பிரதீப் வெளியேற்றத்திற்கு பிறகு புள்ளி கேங்க் என்று விமர்சிக்கப்பட்ட அவர், 3 முறை கேப்டன் டாஸ்கில் தகுதி பெற்றும் ஒருமுறை கூட அவரால் கேப்டனாக முடியாமல் போனது. இந்த நிலையில், தற்போது சுவாரஸ்யம் குறைவு மற்றும் மக்கள் வாக்கின் அடிப்படையில், இந்த வாரம் ஜோவிகா வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ரெட் கார்ட்டு மூலம் வெளியேற்றப்பட்ட, பிரதீப் ஆண்டனி ஒரு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஜோ ஜோ என்று குறிப்பிட்டிருந்தார்.
அதைப்பார்த்த ரசிகர்கள், ஜோவிகாவை தான் அவர் ஜோ ஜோ என குறிப்பிட்டுள்ளார் என்றும் வீட்டில் ஜோவிகா அடிக்கடி தூங்குவதையும், நாய் குறைப்பதை தான் அவர் இப்படி சுட்டி காட்டியுள்ளார்.
மேலும் படிக்க…Karakattakaran Kanaka: பல வருடங்களுக்கு பிறகு நடிகை கனகாவை சந்தித்த குட்டி பத்மினி!

வனிதா விஜயகுமார்:
தற்போது, ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை உறுதி செய்துள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இது குறித்து, வனிதா விஜயகுமார் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜோவிகா வெளியேற வாய்ப்பே இல்லை.


விக்ரம் மற்றும் அனன்யா போன்ற போட்டியாளர்கள்:
என்னுடைய நட்பு வட்டாரத்திலும் அதை தான் சொல்கிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் விக்ரம் மற்றும் அனன்யா போன்ற போட்டியாளர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.
அனன்யா கொடுத்த மறு வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளவில்லை. விக்ரமன் இனி Content கொடுக்க எதுவுமே இல்லை. இவர்கள் எல்லாம் இருக்கும் போது பிக்பாஸ், ஜோவிகாவை வெளியேற்றினால் அது Unfair? கேம் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க…Karakattakaran Kanaka: பல வருடங்களுக்கு பிறகு நடிகை கனகாவை சந்தித்த குட்டி பத்மினி!