பாதாமில் அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதனை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. மேலும், பாதாம் பருப்பில் மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
இது கொலஸ்ட்ரால் பிரச்சனை முதல் வயது முதிர்வு வரை எல்லாவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இருக்கும். மேலும், இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி உள்ளது. குறிப்பாக, உங்கள் சருமத்தை பொலிவாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.
பாதாமில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுவாக வைக்கும். மேலும், ஊறவைத்த பாதாம் நீரழிவு நோயாளிகளுக்கு, ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்:
பாதாம் சாப்பிடுவது குறைந்த (எல்டிஎல்) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும், உடலில் நல்ல கொழுப்பின் (எச்டிஎல்) அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் பாதாமில் ஏராளம் நிறைந்துள்ளது.
பாதாமில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட உதவுகிறது.
ஆரோக்கியமான எடையை பராமரிக்கும்:
பாதாம் சாப்பிடுவது உங்கள் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் அபாயத்தை குறைக்க உதவும். பாதாமில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து உங்கள் பசியை கட்டுக்குள் வைக்கும். மேலும், ஆண்மைக் குறைவு, பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம்:
பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
சருமம்:
பாதாம் சாப்பிடுவது உங்கள் சருமத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க செய்யும். பாதாமில் புத்துணர்வு பெற செய்யும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இது தோலுக்கு அதிக பளபளப்பை தருகிறது. உங்களின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கும் தன்மை கொண்டது.