Sharing is caring!

Belly Fat Reduction: இன்றைய நவீன வாழ்க்கை முறையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொப்பையை குறைப்பது என்பது மிகுந்த சவாலாக உள்ளது. தொப்பை குறைய என்னதான் நாம் உடற்பயிற்சி செய்தாலும், அவ்வளவு எளிதில் பலன் கிடைக்காது.

மேலும் படிக்க…Mosquitoes Remedies: மழைக்காலத்தில் கொசு தொல்லையை முற்றிலும் ஒழிக்க…நச்சு டிப்ஸ் இருக்கு..!

தொப்பை குறையாமல் இருக்க நமது உணவுப் பழக்கம் என்பது ஒரு முக்கிய காரணமாகும். எனவே, நமது உணவுப் பழக்கங்களில் ஒரு சில மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், தொப்பை குறைவது மட்டுமின்றி, உடல் எடையை குறைத்து நாம் ஆரோக்கியமானவும் வாழலாம்.

நெல்லிக்காய் சாறு:

தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அல்லது அதன் சாறை குடிக்க வேண்டும். வெந்தயத்தை ஊற வைத்து அதன் தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர வேண்டும்.

கொள்ளு ரசம்:

கொள்ளுவை ரசமாகவோ, வேக வைத்தோ சாப்பிட்டால் தொப்பை குறையும்.

குறிப்பாக, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் காலையில் எலுமிச்சை சாற்றை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க…Mosquitoes Remedies: மழைக்காலத்தில் கொசு தொல்லையை முற்றிலும் ஒழிக்க…நச்சு டிப்ஸ் இருக்கு..!

கிரீன் டீ தேன்:

கிரீன் டீ என்பது தொப்பை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த பானமாக உள்ளது. கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்துவதை விட, உலர்த்திய கிரீன் டீ இலைகளை வாங்கி, வெந்நீரில் போட்டு மூடிவைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் கிரீன் டீயின் ஃபிளேவர் வெந்நீரில் கலக்கும். இதில், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் தொப்பை உடனடியாக குறையும்.

எனவே, இந்த மூன்று வழிகள் தொப்பையை குறைப்பது மட்டுமின்றி, உடல் எடையும் கட்டுக்குள் வைக்கும். மேலும், நாம் ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொடுக்கும்.

மேலும் படிக்க…Mosquitoes Remedies: மழைக்காலத்தில் கொசு தொல்லையை முற்றிலும் ஒழிக்க…நச்சு டிப்ஸ் இருக்கு..!

(Visited 78 times, 1 visits today)

Sharing is caring!