Guru Peyarchi 2023: நவகிரகங்களில் குரு பகவான் அறிவு, வளர்ச்சி, செல்வம், தர்மம் ஆகியவற்றின் காரண கிரகமாக இருக்கிறார். நீதியின் கடவுளாக சனி பகவான் இருக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த சனி இந்த மாதத்திலும், குரு டிசம்பர் மாதத்திலும் வக்ர நிவர்த்தி அடைய இருக்கின்றனர். இதன் காரணமாக மேஷம், சிம்மம், மிதுனம் ஆகிய மூன்று ராசியினருக்கு குபேர யோகம் வாய்ந்திருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து யோகத்தை வாரி வழங்க இருப்பதால் இதுவரை கிடைக்காத, செல்வமும் மகிழ்ச்சியும் இந்த ராசிகளுக்கு கிடைக்க இருக்கிறது. அவை என்னென்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வேலையில் இருப்பவர்களுக்கும் இது நல்ல நேரம் ஆகும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.
சிம்மம்:
சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு, பணப் பற்றாக்குறை இருக்காது. இது வேலை மற்றும் பணிகளுக்கான நல்ல ஆதாரமாகும். உங்கள் தொழிலில் லாபம் கிடைக்கும். தொழிலில் வருமானம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் மரியாதை கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.
மிதுனம்:
மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரத்தில் உங்கள் குடும்பம், உறவினர்கள் மத்தியில் ஒற்றுமை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் இருக்கும். இருப்பினும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.