Sharing is caring!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி கமல், பிரதீப்பை வெளியேற்றியதற்கு யுகேந்திரன் மனைவி ஹேம மாலினி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 மற்ற சீசன்களை காட்டிலும், பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட பெல் டாஸ்கில், பிரதீப் கூல் சுரேஷை கெட்ட வார்த்தையில் ஒருமையில் பேசியது இணையத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுக்க வலியுறுத்திய ஹவுஸ்மேட்ஸ்! கமல் எடுத்த அதிரடி முடிவு!

உரிமை குரல் கொடுத்த போட்டியாளர்கள்:

அதனடிப்படையில், இன்று நடந்த வீக் எண்ட் எபிசோடில் ஜோவிகா, மாயா, பூர்ணிமா, நிஸ்சன், ரவீனா, கூல் சுரேஷ், சரவணனை, மணி, அன்னபாரதி, விஸ்ணு ஆகியோர் உரிமை குரல் கொடுக்கிறார்கள்.

இதில் முதலில் பேசிய ஜோவிகா, பிரதீப் கெட்ட வார்த்தைகள் தவறான நோக்கத்திற்கு யூஸ் பண்ணுவதாக கூறினார். பூர்ணிமா நைட் தூங்குவதற்கு பயமாக இருக்கிறது என்றார்.

மேலும், தொடர்ந்து பேசிய ரவீனா என்னுடைய அருணாகயிறு பற்றி எல்லாம் கமெண்ட் பாஸ் பண்ணி இருக்கிறார் என்று அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறினார்.

பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு:

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். இதற்கு முன் கவின் பிக்பாஸ் ஷோவில் இருந்தபோது அவரை நண்பராக சந்திக்க வந்த போது அவரின் கன்னத்தில் அறைந்து பிரபலம் ஆன பிரதீப் அதன் பின் சினிமாவில் நடித்து வந்தார்.

பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுக்க வலியுறுத்திய ஹவுஸ்மேட்ஸ்! கமல் எடுத்த அதிரடி முடிவு!

பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக நெட்டிசன்கள்:

பிரதீப் வெளியேறியதன் பின் சிலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் கூட, பலரும் அவருக்கு ஆதரவாக தான் பேசி வருகிறார்கள். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரதீப் தான் உண்மையான டைட்டில் வின்னர். அவர் டைட்டில் வின்னர் ஆகிவிடுவார் என்ற பயத்தில் தான் மற்ற போட்டியாளர்கள் எல்லாம் சேர்ந்து இப்படி செய்தார்கள் என்று கூறி வருகிறார்கள்.

மேலும், நெட்டிசன்கள் பலரும், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது மிகவும் தவறான விஷயம். இதுவரை பிரதீப்பிற்கு எதிராக எந்த ஒரு பெண்ணும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், திடீரென ஒரே நாளில் எப்படி இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தது சரியில்லை என்று கூறி வருகின்றனர். மேலும், இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் இப்படி நடந்ததே இல்லை. இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை என கூறி வருகின்றனர்.

பிரதீப்பிற்கு ஆதரவாக கவின்:

இது குறித்து, அவருடைய நண்பர் கவின் உன்னை தெரிந்தவர்களுக்கு உன்னை பற்றி தெரியும் என்று கூறியுள்ளார்.

பிரதீப் போட்ட முதல் பதிவு:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரதீப் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் பெற்ற கோப்பைகள்’ என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கமலை வறுத்தெடுத்த யுகேந்திரன் மனைவி:

இது குறித்து பேசிய ஹேம மாலினி, கமல் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளிவந்த புன்னகை மன்னன் படத்தில் 16 வயது நிறைந்த ரேகாவுக்கு அவரின் அனுமதி இன்றி லிப் லாக் கிஸ் கொடுத்தார். இப்படி இருக்கும்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவது சரியா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுக்க வலியுறுத்திய ஹவுஸ்மேட்ஸ்! கமல் எடுத்த அதிரடி முடிவு!

(Visited 34 times, 1 visits today)

Sharing is caring!