Sharing is caring!

jovika

பிக் பாஸ் 7ம் சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக முறையில் தொடங்கி இருக்கிறது. இந்த முறை சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். வழக்கம் போல் கேப்டனை தேர்தெடுக்கமால், இந்த முறை புதுமையான விஷயத்தை கையில் எடுத்துள்ளார்கள்.முதல் போட்டியாளர் நுழைந்த கூல் சுரேஸுடம் இருந்தே கேப்டன்சி டாஸ்க் துவங்குகிறது. டாஸ்க் முடிவில், விஜய் வர்மா புதிய கேப்டனாக தேர்தெடுப்படுகிறார். இதனை பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்கள் ஆரம்பமே அமர்க்களமாக இருக்குது என்று இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கூல் சுரேஷ் முதல் வனிதா மகள் ஜோவிகா வரை..! 18 போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!

முதல் நாளே பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளில் போட்டியாளர்களை பிரித்து எல்லோருக்கும் நடுவில் வாக்குவாதத்தை பிக் பாஸ் தொடங்கிவிட்டார். கேப்டனான விஜய் வர்மாவை கவராத 6 போட்டியாளர்கள் என ரவீனா, நிக்சன், பவா செல்லதுரை, அனன்யா, ஐஷூ, வினுஷா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அத்துடன் இந்த ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சில விதிமுறைகள் பின்பற்ற கொடுக்கப்படுகிறது. அந்த விதிமுறைகள் அனைத்தும் பார்ப்பதற்கு ஜெயிலில் இருக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் போல் உள்ளது. இந்த கண்டிஷனை பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்கள் இது ஸ்மால் பாஸ் வீடா இல்லை ஜெயில் பாஸ் வீடா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், மற்றுமொரு ஷாக்கிங் விஷயம் என்னவென்றால், இந்த முறை இரண்டு நாமினேஷன் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளது. அதாவது, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் மாறிமாறி நாமினேட் செய்ய வேண்டும். இதனால், இந்த முறை இரண்டுஎலிமினேஷன் இருக்க வாய்ப்பிருக்கிறது.

அதன்படி, இந்த வார நாமிநேஷன் லிஸ்டில் ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப், பவா செல்லத்துரை, ஐஷு,அனன்யா, ரவீனா ஆகியோர் இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக வனிதா மகள் ஜோவிகாவிற்கு 4 ஓட்டுகளும், யுகேந்திரனுக்கு 3 ஓட்டுகளும் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த 7 பேரில் இருந்து வாக்கு எண்ணிக்கையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்பட இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கூல் சுரேஷ் முதல் வனிதா மகள் ஜோவிகா வரை..! 18 போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இதோ..!

(Visited 29 times, 1 visits today)

Sharing is caring!