பிக்பாஸ் வீட்டின் 7 -வது சீசன் அக்கோபர் 1ம் தேதி கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். வழக்கம் போல் இல்லாமல், இந்த முறை இரண்டு வீடு, இரண்டு குரல் என்று இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி, முதல் நாளே வீட்டின் கேப்டனான விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை அதிகம் கவராத போட்டியாளர்கள் என்ற விதத்தில், ரவீனா, நிக்சன், பவா செல்லதுரை, அனன்யா, ஐஷூ, வினுஷா ஆகிய 6 போட்டியாளர்கள் பிக்பாஸின் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதுமட்டுமின்றி, இந்த முறை இரண்டு நாமினேஷன் என மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதில் நாமினேட் செய்யும் போட்டியாளர்கள் மற்றுமொறு போட்டியாளரை, ஸ்ட்ராங் கண்டெஸ்டண்ட், மிங்கில் ஆகவில்லை, கனெக்ட் இல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறினார்கள். ஆனால், நடிகை விசித்ரா சர்சைக்குரிய விஷயங்களை சொல்லி நாமினேஷன் செய்துள்ளார். அப்போது உள்ளே வந்த அவர் அனன்யா ராவை முதலில் நாமினேட் செய்து அவர் இன்னும் தன்னை வெளிப்படுத்தி கொள்ளவில்லை என்று சொன்னார். இரண்டாவதாக ஐஷு என்ற போட்டியாளரின் மேக்கப் ஸ்டைல், உட்காரும் விதம், ஆடை சரியில்லை, இங்கே சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை இருக்கிறார்கள். அதனால் ஆடை விஷத்தை கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி நாமினேட் செய்திருக்கிறார். இதனால், விசித்ராவுக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் விசித்ரா கிளாமராக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 7 ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்களின் அதிகம் கவனம் பெற்ற இந்த நிகழ்ச்சியில், தன்னுடைய சக போட்டியாளர் ஒருவரிடம் அனன்யாவை காட்டி அவரின் பெயர் என்ன என்று கேட்கிறார். அதற்கு அந்த போட்டியாளர் அவரின் பெயர் அனன்யா என்று சொன்னவுடன். ஷாக்கான விசித்ரா நான் ‘ஆள் மாத்தி நாமினேட்’ செய்து விட்டேன் என்று கூறுகிறார்.
அனன்யாவிற்கு பதில், ஐஷுவை மாத்தி நாமினேட் செய்துவிட்டாராம். ஐஷுவிற்கு பதில் அனன்யா என்ற பெயர் சொல்லி நாமினேட் செய்திருக்கிறார். அப்படினா..இவர் ஆடை சர்சை பற்றி சொன்னது, ஐஷு இல்லை அனன்யாவா ..? இல்லை மற்றுமொறு போட்டியாளரா..? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் மண்டையில் இருந்த கொண்டையை மறந்துட்டியே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.