காந்தியின் 154வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2ம் தேதி) நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் 1869 அன்று பிறந்தார். இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராடிய அவரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கடந்த 2007 ஆம் ஆண்டில், அக்டோபர் 2ம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்தது.
மேலும் படிக்க…Jeans Care Tips: ஜீன்ஸை எப்போதும் புதியது போன்று பராமரிக்க சூப்பர் ஐடியா இதோ..!
சுத்தம், சுகாதாரம்.. தூய்மைக்கு முன்னுரிமை:
‘தேசப்பிதா காந்தி’ தூய்மைக்கு முன்னுரிமை அளித்தார். சுதந்திரத்தை விட சுகாதாரம் முக்கியம் என்ற அவரது வார்த்தைகள் இதற்கு ஆதாரமாக சொல்லப்படுகிறது. சுத்தம், சுகாதாரம் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்தியவர். அனைவருக்கும் சுகாதாரம் என்ற காந்தியின் கனவினை நிறைவேற்ற, இந்தியாவை உலகளாவிய சுகாதார நாடாக மாற்றும் நோக்கில் கடந்த 2014 அக்டோபர் 2 ஆம் தேதி அன்று ”ஸ்வச் பாரத்” தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
காந்தியடிகள் கடந்து வந்த பாதை:
1915 இல், காந்தி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். ஆங்கிலேயே அரசுக்கு எதிராக அகிம்சை, ஒத்துழையாமை மற்றும் சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தவர். பிரிட்டிஷ் விதிகளுக்கு எதிராக பல்வேறு இயக்கங்களை உருவாக்கினார். இந்த காலகட்டத்தில் காந்தி பலமுறை சிறைக்கு சென்றார். இவர், 1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். மேலும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டவர். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. இறுதியில், காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி புது டில்லியில் ‘கோட்சேவால்’ சுட்டுக் கொல்லப்பட்டார்.
காந்தி ஜெயந்தி 2023:
இவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் ‘காந்தி ஜெயந்தி’ அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெட்டிசன் ஒருவர் A1 அப்டேட் வெர்சன் மூலம் காந்தியை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க…Jeans Care Tips: ஜீன்ஸை எப்போதும் புதியது போன்று பராமரிக்க சூப்பர் ஐடியா இதோ..!