Sharing is caring!

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் இரண்டு வீடு, ஒரு கிச்சன் என புதுமையான பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சி துவங்கும் போது, வீட்டுக்குள் ஒரு கமல், வீட்டிற்கு வெளியே ஒரு கமல் இருக்கிறார்கள். இதையடுத்து, கமல் வழக்கம் போல் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்து இருக்கிறார். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். வழக்கம் போல் கேப்டனை தேர்தெடுக்கமால், இந்த முறை புதுமையான விஷயத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

அதாவது, முதல் போட்டியாளர் நுழைந்த கூல் சுரேஸுடம் இருந்தே கேப்டன்சி டாஸ்க் துவங்குகிறது. இவர்களுக்கு அடுத்த வரும் போட்டியாளரிடம், விவாதத்தில் ஈடுபட்டு தங்களின் கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நிகழ்ச்சியின் முதல் டாஸ்க். இதனை பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்கள் ஆரம்பமே அமர்க்களமாக இருக்குது என்று இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: ஜூலி முதல் ஆஸிம் வரை..பிக்பாஸ் வீட்டை கலவர பூமியாக மாற்றிய போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ..!!

முதல் ஆளாக வீட்டில் நுழைந்த கூல் சுரேஷை தொடர்ந்து, பிரபல யூடியூபர் பூர்ணிமா ரவி இரண்டாவது ஆளாக நுழைந்துள்ளார். இவர், ஆராத்தி என்ற பெயரில் இணையத்தில் பிரபலம் அடைந்தவர்.

இவரை தொடர்ந்து 3 ஆவது ஆளாக ரவீனா என்பவர் நுழைந்துள்ளார். இவர் ராட்சசன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சீரியல் நடிகை, குக்வித் கோமாளி 4ல் கோமாளி என அடுத்தடுத்து புகழ் பெற்றவர்.

அவரை தொடர்ந்து, அருவி, வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரதீப் ஆண்டனி நான்காவது நபராக நுழைந்துள்ளார். இவர் சீசன் 3ல் கலந்து கொண்ட கவினின் நெருங்கிய நண்பர் ஆவார்.

அவரை தொடர்ந்து, இளம் ராப் பாடகரான நிக்ஸன் 5 -வது போட்டியாளராக வந்துள்ளார். 6 ஆவது போட்டியாளராக பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற வினுஷா ரவி வந்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டின் 7- வது போட்டியாளராக நடனக் கலைஞர் மணி வந்துள்ளார். இவர் ரவீனாவின் நெருங்கிய நண்பர் ஆவார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 8 ஆவது போட்டியாளராக வந்துள்ளார் ‘லவ் டுடே’ படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை அக்‌ஷயா. அவரை தொடர்ந்து, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் 9 ஆவது போட்டியாளராக நுழைந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக நுழைந்துள்ள நடனக் கலைஞர் ஐஸூ 10 வது போட்டியாளர் ஆவார். இவர் அமீரின் நெருங்கிய தோழி ஆவார். அவர்களை தொடர்ந்து,  11வது போட்டியாளராக விஷ்ணு விஜய் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். நிகழ்ச்சியின் 12 -வது போட்டியாளராக விக்ரம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற மாயா கிருஷ்ணன் என்பவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அடுத்ததாக, 13 வது போட்டியாளராக அதிரடியாக என்ட்ரி கொடுத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரம். இவரை தொடர்ந்து பாடகர் மற்றும் நடிகர் என்று 90ஸ் கிட்ஸ் புகழ்பெற்ற யுகேந்திரன், 14 வது போட்டியாளராக நுழைந்துள்ளார். இவர், பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார்.

இவரை தொடர்ந்து 15 வது போட்டியாளராக விசித்ரா என்பவர் நுழைந்துள்ளார். 90ஸ் பிரபல துணை நடிகையான இவர் வடிவேலுக்கு ஜோடியாக முத்து உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் குக் வித் கோமாளி நிழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.

அடுத்ததாக, 16வது போட்டியாளராக மூத்த எழுத்தாளர் பவா செல்லதுரை என்பவர் நுழைந்துள்ளார். முழு நேர எழுத்தாளரான இவர் ”கதா பிரசங்கம்” என்ற ஒரு பாணியை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தவர். மேலும், இவர் ஜெய் பீம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டினுள் 17 -ஆவது போட்டியாளராக நுழைந்துள்ளார் வளர்ந்து வரும் மாடலான அனன்யா எஸ் ராவ் என்பவர். பிக்பாஸ் வீட்டினுள் 18 ஆவது அல்லது இறுதி போட்டியாளராக நுழைந்துள்ளார் இளம் நடனக் கலைஞர் விஜய் வர்மா என்பவர். இறுதியாக வந்த இவருக்கு கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது. இவரை யாரும் இந்த வாரம் எலிமினேஷன் செய்ய முடியாது என்று பிக்பாஸ் கூறியுள்ளது.

மேலும் படிக்க…Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கூல் சுரேஷ் முதல் ஜோவிகா வரை..! 18 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ..!

(Visited 162 times, 1 visits today)

Sharing is caring!