உங்கள் ஜீன்ஸை எப்போதும் புதியது போல் பராமரிக்க சில எளிய குறிப்புகளை பார்க்கலாம்.
ஜீன்ஸ் பேண்ட் ஆண், பெண் ஆகிய இருவரும் உடுத்தும் பொதுவான ஆடையாக மாறியுள்ளது. இன்றைய நவீன கால கட்டத்தில் ஆன்லைன் மூலம் வாங்கி விதவிதமான உடைகளை உடுத்தி அழகு பார்த்தாலும், இரண்டு, மூன்று முறை துவைத்து பிறகு பார்த்தால், அவற்றின் தன்மை மாறி பழைய துணி மாதிரி, சுருங்கி போய் விடுகிறது. எனவே, இனிமேல் உங்கள் ஜீன்ஸை எப்போதும் புதியது போல் பராமரிக்க தேவையான உதவி குறிப்புகளை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப் போகிறோம்.
ஜீன்ஸை துவைக்கும் போது அதன் உட்பகுதியை வெளிப்புறமாக திருப்பி விட்டு துவைக்க வேண்டும். அதேபோல், ஜீன்ஸ் பேண்டை துவைக்கும் போது அதன் பட்டன், ஜிப் ஆகியவற்றை மூடி துவைக்க வேண்டும்.
சாதம் வடித்த கஞ்சியில் ஜீன்ஸ் பேண்டை அரை மணி நேரம் ஊற வைத்து அலசி எடுத்து பார்த்தால், உங்கள் துணிகள் அயர்ன் பண்ணிய துணி போல் எப்போதும் சுருங்காமல் விரைப்பாக இருக்கும்.
ஜீன்ஸ் பேண்டை துவைத்த பின்பு அதனை வெயிலில் உலர்த்தும் போது, சூரிய ஒளி நேரடியாக ஜீன்ஸின் வெளிப்புறம் படாதவாறு ஜீன்ஸின் உட்புறத்தை வெளிப்புறம் திருப்பி உலர்த்தவும். ஜீன்ஸின் நிறம் மாறாமல் இருக்க ப்ளீச் செய்வதை தவிர்த்தல் நல்லது.
ஜீன்ஸ் பேண்டை ஜவ்வரிசி கலந்த குளிர்ந்த தண்ணீரில் அலசி எடுத்தால் ஜீன்ஸ் சுருங்காமல் எப்போதும் புதிதாக இருக்கும். இதனை எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும், நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜீன்ஸை துவைக்கும் போது, அதன் பாக்கெட்டில் ஏதேனும் காகிதம் உள்ளதா ..? என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், காகிதம் கரைந்து அதன் தரத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இனிமேல் நீங்கள் ஜீன்ஸ் துவைக்கும் போது கஞ்சி போட்டு துவைத்து பாருங்கள். அதிலும், குறிப்பாக காட்டன் துணிகளுக்கு இந்த முறையை பின்பற்றி பாருங்கள், நிச்சயம் நல்ல ரிசல்ட் இருக்கும்.