Sharing is caring!

Vijayakanth’s Funeral: விஜயகாந்த் அடக்கம் செய்த சந்தன பேழை பற்றிய விவரங்கள் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கேப்டன் விஜயகாந்த் பற்றி தான் பேசி வருகிறார்கள். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை 6.10 மணிக்கு நிமோனியா காரணமாக காலமானார்.

அவர் உயிரிழந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எப்படி அவர் வாழ்ந்துள்ளார் என்பது அவரது மறைவு செய்தி வந்த பிறகே அனைவருக்கும் அதிகம் தெரிய வந்துள்ளது. கருப்பான தேகம், சிவந்த கண்கள், முரட்டு மீசையுடன் திரையுலகில் கால் வைத்து தனக்கென ஒரு பாணி, தனக்கென ஒரு ரசிகர் வட்டம் என்று உருவாக்கி உச்சம் தொட்டவர் விஜயகாந்த்.

மேலும் படிக்க…Bigg boss Elimination: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா வெளியேற்றம்.. அனன்யா மற்றும் விக்ரமன் வேஸ்ட்! வனிதா ஆவேசம்!

எம்.ஜி. ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு போலவே விஜயகாந்துக்கும் இருந்தது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான். ஏனெனில், சிவந்த தேகம் கொண்டவர்கள் தான் சினிமாவில் நடிக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்ததில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

விஜயகாந்த் திரைப்படங்கள்:

விஜயகாந்த் திரைப்படங்களில், சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப்போல், அம்மன் கோவில் கிழக்காலே, ரமணா, வைதேகி காத்திருந்தாள் போன்றவை இன்றும் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்தவை.

விஜயகாந்த் பாடல்கள்:

கிராமங்களில் நடைபெறும் திருமண விழாக்களில், விஜயகாந்த் பாடல்கள் ஒலிக்காமல் இருக்காது. குறிப்பாக, ”ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சி சேதி சொன்ன மன்னவருதான்” என்ற பாடல் மணப்பெண்கள் தங்கள் வருங்கால கணவருக்கு தங்கள் மனதில் உள்ள ஆசையின் வெளிப்பாடாக கருதினர்.

கருப்பு எம்.ஜி. ஆர் எனப் போற்றப்பட்ட விஜயகாந்த்:

கருப்பு எம்.ஜி. ஆர் எனப் போற்றப்பட்ட விஜயகாந்த்தின் மறைவு, அவரது ரசிகர்கள், தொண்டர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கண்ணீர்விட வைத்துள்ளது.

ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன், குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன், ஊரே அழுதா நல்ல தலைவன், உனக்காக நாடே அழுவுதுய்யா என்ற வசனம் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இடம் பெற்றிருக்கும்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த பல முக்கிய அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அதிகம் வந்தனர்.

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்:

இதையடுத்து, நேற்று முன்தினம் (டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை) மாலை அங்கிருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டனர். கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தேமுதிக அலுவலகம் வந்த பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.

சந்தன பேழையில் உடல் அடக்கம்:

அதன் பின் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்து, சந்தன பேழையில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்தனர். அந்த சந்தன பேழை இரண்டு பக்கமும் கேப்டன் என எழுதப்பட்டிருந்தது அதுமட்டுமில்லாமல் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என பெயரும் அவர் பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு பதிக்கப்பட்டிருந்தது அந்த சந்தன பேழை பற்றி விவரங்கள் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

Karakattakaran Kanaka: பல வருடங்களுக்கு பிறகு நடிகை கனகாவை சந்தித்த குட்டி பத்மினி!

எம்ஜிஆர், அண்ணா வழியில் விஜயகாந்த்:

இந்த சந்தன பேழை செய்தவர் ஏற்கனவே எம்ஜிஆர், அண்ணா உள்ளிட்ட பல தலைவர்களுக்கு செய்து கொடுத்தவர் தான். இதன் மதிப்பு சுமார் 1.25 லட்சம் ரூபாய் முதலில் கேட்டுள்ளார்கள் அதன் பிறகு இறுதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Karakattakaran Kanaka: பல வருடங்களுக்கு பிறகு நடிகை கனகாவை சந்தித்த குட்டி பத்மினி!

(Visited 65 times, 1 visits today)

Sharing is caring!