Sharing is caring!

பல வருடங்களுக்கு பின்னர் நடிகை கனகாவை, சந்தித்த குட்டி பத்மினி இது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை தேவிகா. இவர் நடிப்பில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலையம் போன்ற படங்கள் காலத்தில் அழியாதவை. இவரின் ஒரு மகள் தான் கனகா.

தன்னுடைய 16 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர்:

இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு, இளையராஜா இசையில், கங்கையமரன் இயக்கிய, கரகாட்டக்காரன் படத்தில் தன்னுடைய 16 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சொல்லப்போனால் கனகா ஒரே படத்திலியே ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

இதையடுத்து, கனகாவுக்கு வரிசையாக பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி, ரஜினியுடன் அதிசய பிறவி, பிரபுவுடன் கும்பகரை தங்கைய்யா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதுவரை தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட பாடங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். குறிப்பாக, மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘காட்ஃபாதர்’ சுமார் 434 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. கடைசியாக அவர் தமிழில் விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே போல், மலையாளத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு ‘நரசிம்மம்’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க….Bigg boss Vanitha: நடிகை வனிதா மீது தாக்குதல்-எனக்கும் நடந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பிரதீப் விளக்கம்!

தாய் தேவிகாவின் மறைவு:

அதன் பிறகு, எந்த படங்களிலும் நடிக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய இவங்க, சினிமாவிலிருந்து மட்டுமில்லை மனிதர்களிடமிருந்தே ஒதுங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. தாய் தேவிகாவின் மறைவு. அதுமட்டுமின்றி தந்தையுடன் ஏற்பட்ட சொத்து பிரச்சனை. ஒருதலை காதல் விவாகரம் காரணமாக போன்றவையால் மன அழுத்தம் ஏற்பட்டு பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாத வீட்டில் தனியாக வசித்து வருகிறாராம். இவருக்கு உதவியாளர் ஒருவர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. அதை தவிர தனக்கான வேலைகள் அனைத்தையும் தானே செய்து கொள்வாராம்.

மேலும் படிக்க….Bigg boss Vanitha: நடிகை வனிதா மீது தாக்குதல்-எனக்கும் நடந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பிரதீப் விளக்கம்!

நடிகை கனகாவை சந்தித்த குட்டி பத்மினி:

அக்கம், பக்கத்தில் இருப்பவர் கூட எப்போதாவது தான் இவரை பார்க்க முடியுமாம். அதே போல் இவரை பார்க்க பல வருடங்களாக பிரபலங்கள் முயற்சி செய்தும் இவர் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் நடிகை கனகாவை, பிரபல நடிகை குட்டி பத்மினி அவருடைய வீட்டிற்க்கே சென்று பார்த்துள்ளார். இது தொடர்பாக எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கனகா, ஆளே அடையாளம் தெரியாமல் மிகவும் குண்டாக மாறிட்டாங்கனு கூறி அந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.

தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்:

இந்த நிலையில், தனியார் சேனல் ஒன்றிற்கு கனகாவை சந்தித்தது குறித்து அவங்க அளித்த பேட்டியில், கனகாவை சந்தித்தது ரொம்பவே சந்தோஷம். கனகாவை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் காஃபி ஷாப் போனேன். அங்கே இருவரும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் கனகாவிடம் உன்னுடைய ரசிகர்கள் உன்னை பார்க்க சொன்னார்கள். உனக்கு உதவி செய்ய சொன்னாங்கனு சொன்னேன். என்கிட்ட ‘நிஜமாவா’ என ஆச்சரியத்துடன் கேட்டார். அதுமட்டுமில்லாமல், வெயிட்டை குறைக்க சொன்னேன். வெளியூர் பயணம் போக சொன்னேன்.

மேலும், என்னுடைய வீட்டிற்கு அழைத்தேன். என்னுடைய சேனலுக்கு பேட்டி கொடுக்க சொன்னேன். அதற்கு கண்டிப்பாக கொடுக்கிறேன் என்றார். என்னை அவர் என்னை அக்கா என்று அழைத்து மிகவும் மகிழ்ச்சி, விரைவில் அவங்களை யூடியூபில் பார்க்கலாம்.

மேலும் படிக்க….Bigg boss Vanitha: நடிகை வனிதா மீது தாக்குதல்-எனக்கும் நடந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பிரதீப் விளக்கம்!

(Visited 63 times, 1 visits today)

Sharing is caring!