பிரதீப் ஆண்டனி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வர தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், சமீபத்தில் நடந்த பிரதீப் ரெட் கார்டு தொடர்பான சர்சைக்குரிய விஷயங்கள் தான். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது நியாமற்றது.
சக போட்டியாளர்கள் பொய்யான குற்றசாட்டு:
மேலும், கடைசி வரை பிரதீப் இடம் அவருடைய தரப்பு நியாயத்தை கேட்கவில்லை என்று பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமலுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் மனதில், பிரதீப் இருப்பதால் வென்று விடுவாரோ என்ற அச்சத்தில் சக போட்டியாளர்கள் பொய்யான குற்றசாட்டை முன்வைத்து வெளியே அனுப்பியதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
அதற்கு பிறகு மாயா கேங் மீது வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்ட சில போட்டியாளர்களே கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதில் சிலவற்றில் பிரதீப்பின் மீது தவறு அல்ல என்பது போன்ற ஆதாரங்கள் கிடைத்தன.
மாயா கேங் மீது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம்:
மாயா கேங் மீது நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். மாயா மற்றொரு பெண் போட்டியாளர் ஐஷுவும் மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஒரே பாத்ரூமுக்குள் விதியை மீறி பேசியது.
நிக்சன் வினுஷாவை பற்றி பேசியது, அதுபோல தினேஷை ஆம்பளையா என ஜோவிகா பேசியது போன்ற பல விமர்சனங்கள் முன் வைக்கப்ட்டது. அதுமட்டும் இல்லாமல் இன்று நடந்த கோர்ட் டாஸ்கிலும் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இது தொடர்பான சண்டை காட்சிகள் எல்லாம் இணையத்தில் வைரலானது.
பிக்பாஸ் 7ம் சீசனில் Bully Gang:
பிக்பாஸ் 7ம் சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோரை Bully Gang என குறிப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
தற்போது, உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களுமே கெட்ட வார்த்தை இரட்டை அர்த்த வசனங்களை பேசிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதீப்பிற்க்கு மட்டும் ஏன் இந்த தண்டனை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் பிரதீப் செய்தது தவறாக இருந்தாலும் அவருக்கு வார்னிங் கொடுத்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து:
இப்படியாக இருக்கும் நிலையில் பிரதீப் ஆண்டனி வெளியே வந்த பிறகு நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு தீர விசாரிப்பதே மெய் என்பது ஹேஷ் டேக்கையும் டேக் செய்து இருந்தார்.கமலின் இந்த முடிவிற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதோடு, கம் பேக் பிரதீப் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரதீப் ஆண்டனி ட்விட்டர் பதிவு:
இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வர தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு எதிராக சதி செய்த 2 பேரை வெளியேற்ற 2 ரெட் கார்டு வேண்டும். அதேபோல், நான் 7வது வாரத்தின் கேப்டன் ஆக வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இதுவே முதல் முறை:
மேலும், நான் இனி நன்றாக நடந்து கொள்வேன் என்றும் ஒரு இடைவேளை முடித்து பழிவாங்கும் படலத்துடன் வரும் படம் போல வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், பிரதீப் பிக்பாஸ் போட்டிக்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இது மட்டும் நடந்தால் பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.