Sharing is caring!

Pan Cleaning Tips: இன்றைய நவீன காலத்து பெண்கள் பலரும் அதிக நேரம் சமையல் அறையில் செலவு செய்ய விரும்புவது கிடையாது. முடிந்தவரை சமையல் அறையின் அனைத்து வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கவே விரும்புகிறார்கள். ஆனால், அப்படி நாம் தினமும் அவசர அவசரமாக சமைக்கும் போது, பாத்திரத்தில் அடிப்பிடித்து விடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இவற்றை சுத்தம் செய்வது என்பது சற்று கடினமான வேலைதான். அதிலும், பால் பாத்திரம் அடிப்பிடித்தால் அதை சுத்தம் செய்வது மிகவும் சிரமமான ஒன்றாகும். எனவே, இதுபோன்ற அடிப்பிடித்த பாத்திரத்தில் கறைகளை எளிதில் நீக்க சில ஈஸியான வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

செய்முறை விளக்கம்:

இதற்காக நீங்கள் முதலில் பேக்கிங் சோடா, வினிகர், சோப்பு பவுடர், எலுமிச்சை சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில், அடிப்பிடித்த கடாயை வைத்து 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதனுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தலா 1 டீஸ்புன் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் கம்பி அல்லது பிரஷை கொண்டு கருகிய பாத்திரத்தை தேய்த்து எடுங்கள்.

இந்த சோப்பு கரைசல் ஸ்டீல், அலுமினியம் மற்றும் இரும்பு பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்கிறது. பேக்கிங் சோடா, வினிகர், பயன்படுத்துவது துர்நாற்றத்தை நீக்கி அடிப்பிடித்த கறை மற்றும் துருவை எளிதில் சுத்தம் செய்ய உதவுகிறது.

பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களும் அடிப்பிடித்த பாத்திரங்களை எளிதில் சுத்தம் செய்ய உதவுகிறது. அடிப்பிடித்த பாத்திரங்களில் இந்த குளிர்பானங்களில் ஏதேனும் ஒன்றை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும். பிறகு வழக்கம் போல் உங்களிடம் இருக்கும் பிரஷ் அல்லது இரும்பு கம்பி கொண்டு பாத்திரத்தை அழுத்தி தேய்த்து எடுத்தால் நிச்சயம் கறை நீங்கும். பாத்திரம் பளபளப்பாக மாறும். நல்ல ரிசல்ட் கிடைக்கும். நிச்சயம் இந்த குறிப்பை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.

நாம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு, மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றி வீட்டில் அதிகம் பயன்படுத்தும் சமையல் அறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

(Visited 84 times, 1 visits today)

Sharing is caring!