Rahu Ketu Transit 2023: நிழல் கிரகமான ராகுவும் -கேதுவும் மீன ராசியில் சஞ்சாரம் செய்வது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அசுப பலன்களை தர இருக்கிறது. இதனால், உஷாராக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில், ராசி பலன்களை வைத்து தனிநபரின் நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை கணிக்க முடியும். சில நேரம், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய இலக்கு உங்களின் ராசி பலன்களை பொறுத்து மாறுபடும். இவை சில நேரம் உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். சில சமயம் உங்களை ஆட்டி படைக்கும்.
அதன்படி, நிழல் கிரகமான ராகுவும், கேதுவும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதற்கு ஒன்றரை ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும். இந்த நேரத்தில், ராகு பகவான் மேஷத்திலும், கேது துலாம் ராசியிலும் அமர்ந்துள்ளனர். இதையடுத்து, வரும் 2023 அக்டோபர் 30-ம் தேதி ராகு மீனத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ராகு-கேதுவின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், எந்தெந்த ராசிகள் இந்த நேரத்தில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் சிக்கல் ஏற்படும். முதலீடு செய்யும் போது அதிக கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த நேரத்தில் உங்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். உடல் நிலை மோசமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம். இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் அதிக மன அழுத்தம் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்று மிகவும் சிக்கலான காலகட்டமாகும். கணவன் -மனைவி இடையே சிக்கல் ஏற்படும். பணியிடத்தில் பல சவால்கள் இருக்கலாம். வேலையில் அமைதியின்மை, பதற்றம் இருக்கும். பண இழப்பு சந்திக்க வேண்டிய சூழல் இருக்கும். பொருளாதார நிலை பலவீனமாக இருக்கும்.