Black Thread Benefits: நம்முடைய முன்னோர்கள் கருப்பு கயிறு கட்டுவதை சப்பிரதாயமாகவே செய்து வந்தனர். பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை கைகளில், இடுப்பில், கால்களில் இந்த கருப்பு கயிறு கட்டியிருப்பதை பார்த்திருப்போம். இதற்கு பின்னால், ஆன்மீக ரீதியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பண வரவு அதிகரிக்க, அடிக்கடி உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்க கைகளில் கருப்பு கயிறு கட்டுவார்கள். கண் திருஷ்டி, கெட்ட சக்திகள் நீங்க சனி பகவானை வேண்டிக்கொண்டு கால்களில் கருப்பு கயிறு கட்டுவார்கள்.
வளர்ந்து வரும் நாகரிக மாற்றத்தில் மூட நம்பிக்கை அல்லது ஓல்ட் ஃபேஷன் என்று சொல்லி இது போன்ற செயல்கள் ஒதுக்கிவைக்கப்பட்டன. ஆனால், இன்றைய நவீன காலகட்டத்தில் மீண்டும் இதுபோன்ற விஷயங்கள் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் இன்றைய வாலிபர்கள், இளம் பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது ட்ரெண்டாகி வருகிறது. இருப்பினும், ஜோதிடத்தின் பார்வையில் சிலருக்கு கருப்பு கயிறு கட்டுவது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், எந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிறு கட்டலாம், கட்டக்கூடாது என பார்க்கலாம். துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகள் கருப்பு கயிறு அணிந்தால், பிரச்சனைகள் வீடு தேடி வரும். குடும்பத்தில் குழப்பம் நிலவும். சில நேரம் உடல் நிலை மோசமாகும். தொழிலில் நஷ்டம் வரும். எனவே, இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிறு அணிவதை தவிர்ப்பது நல்லது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதே நேரம், தனுசு, துலாம், கும்பம் ராசியில் பிறந்தவர்கள் எந்த விதமான தங்கு தடையும் இன்றி கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறு கட்டலாம் என்கின்றனர்.