Sukran Peyarchi 2023 Palangal: ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் வக்ர பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. செல்வம், புகழ், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் தனது ராசியினை ஒரு இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்திற்கு வக்ர நிலையில் மாற்றப்போகிறார். தற்போது, சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் வரும் ஜூலை 23ம் தேதி கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். இதையடுத்து, அவர் ஆகஸ்ட் 7 வரை அங்கேயே வக்ர நிலையிலேயே இருப்பார். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. யார் அந்த அதிர்ஷ்டம் நிறைந்த ராசிகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ரிஷபம்:
சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். உழைப்பிற்கான மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரம் பெருகும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். திருமண காரியம் கைகூடும்.
சிம்மம்:
சிம்மம் ராசியில் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி, எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த உறுப்பினர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும். வெளிநாட்டு சுற்றுலா செல்வீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். திடீர் பண வரவு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு கூடும்.